சாபாவின் பூலாவ் மாபுளில் கடத்தப்பட்ட போலீஸ் அதிகாரியை விடுவிக்க பிணைப்பணம் கோரப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டதன்வழி ஆங்கில நாளேடான நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ், அவரை அபாயத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் சாடியுள்ளார்.
அச்செய்தியைத் தள்ளுபடி செய்த காலிட், மக்கள் “வதந்திகளை நம்பக் கூடாது” என்றார்.
“என்எஸ்டி என்னுடைய அதிகாரிக்கு அபாயத்தை உருவாக்கியுள்ளது”, என காலிட் கூறினார். கடத்தப்பட்ட அதிகாரி பற்றிய செய்திகளை வெளியிட வேண்டாம் என்று தாம் ஏற்கனவே கேட்டுக்கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசியாவில் வதந்திகள்தான் பின்னாளில் உண்மையாகின்றன என்பது உலகமே அறிந்த விஷயம். அதனால்தான் நாங்கள் பொய்யான வதந்திகளாக இருந்ததாலும் 100%-க்கு – 120% உண்மை என்று நம்புகிறோம்.
நெருப்பில்லாமல் புகையுமா ???
சபாவில் வந்தேறிகளுக்கு அடையாள அட்டை கொடுத்ததும், ஊடுருவல்களை மறைத்ததும் ஆள் கடத்தல் போன்ற விஷயங்ககளுக்குச் சப்பை கட்டுகட்டுவதும் இவற்றிற்கு முக்கிய காரணம்… (உங்கள் கருத்து திருத்தப்பட்டுள்ளது. ஆ.ர்.)