சிலாங்கூர் இஸ்லாமிய விவகார மன்றம் (மாய்ஸ்) சிலாங்கூர் சுல்தானின் மறுவடிவம் அல்ல என்கிறார் அரசமைப்பு வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி.
இஸ்லாத்தின் தலைவரான சுல்தான் அவரது பொறுப்புகளை நிறைவேற்ற மாய்ஸ் உதவியாக இருக்கிறது.
எனவே, மாய்ஸைக் குறை சொல்வது சுல்தானைக் குறை சொல்வதாகாது என அசீஸ் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“மாய்ஸின் நடவடிக்கை அரசமைப்பை மீறுவதாகவும் முஸ்லிம்-அல்லாதார் உரிமைகளில் குறுக்கிடுவதாகவும் இருக்குமானால் அதைக் குறை சொல்வது தப்பல்ல”, என்ராரவர்.
மாய்ஸின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்று கூறிய ஷா ஆலம் எம்பி காலிட் சமட்டை சிலாங்கூர் சுல்தான் ஷராபுதின் இட்ரிஸ் ஷா செவ்வாய்க்கிழமை கண்டித்திருந்தார்.
ஆனால், காலிட் சுல்தானைக் குறை சொல்லவில்லை, மாய்ஸைத்தான் குறை கூறினார் என்கிறார்.
அறிவு உள்ளோரின் தெளிவான விளக்கம். இஸ்லாமில்லாதாரின் விவகாரங்களில் அரசமைப்பு சட்டத்தை மீறி (மாய்ஸ்/ ஜாய்ஸ்) எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இஸ்லாமுக்கு அவமதிப்பையே கொண்டுவருகிறது.
நான் ஆதரிக்கிறேன் .