சாபா, பூலாவ் மாபுளில் கடத்தப்பட்ட போலீஸ்காரரை விடுவிக்கக் கடத்தல்காரர்கள் ரிம10 மில்லியன் பிணைப்பணம் கோரியதாக வந்துள்ள தகவல் குறித்து உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி ஒன்று சொல்கிறார், இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் வேறு ஒன்று சொல்கிறார்.
நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சில் வெளிவந்த அச்செய்தியை போலீஸ் தலைவர் மறுக்க, உள்துறை அமைச்சர் கடத்தப்பட்ட ஸக்கியா அலியாப்புக்குப் பிணைப்பணம் கோரப்பட்டிருப்பது உண்மைதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனை அறிவித்த பெர்னாமா, அரசாங்கம் கடத்தல்காரர்களின் கோரிக்கைக்கு இணங்காது என்று ஜாஹிட் தெரிவித்ததாகவும் கூறியது.
மலேசியாவில் பொய்யான வதந்திகளை 100%-க்கு – 150% உண்மை என்று நம்பலாம் என்பதை நிருபித்து விட்டார் உள்துறை அமைச்சர். (உங்கள் கருத்து திருத்தப்பட்டுள்ளது. ஆ.ர்.)