தீபக்கின் கடனில் எல்லாம் சட்டப்படியே நடந்துள்ளது

loanகம்பள  வியாபாரி  தீபக்  ஜெய்கிஷனுக்குக்  கடனளிக்கப்பட்டதில்  எல்லாம்  சட்டப்படியே  நடந்துள்ளது  என்று  கூறுகிறார்  உள்நாட்டு  வாணிக, கூட்டுறவு,  பயனீட்டாளர்  விவகார  அமைச்சர்  ஹசான்  மாலேக்.

அவரின் கடனில்  எஞ்சியிருப்பது  ரிம32 மில்லியன்  மட்டுமே  என்று ஹசான்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.  அது திருப்பிச் செலுத்தப்படாத கடன்  என  வகைப்படுத்தப்பட்டுள்ளது.

“மீதமுள்ள  கடனில்  முடிந்தவரை  எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவைத்  திரும்பப்  பெற்று  இழப்பைத்  தவிர்ப்பது  நிர்வாகத்தின்  பொறுப்பாகும்”,  என்றாரவர்.

நேற்று,  பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லி,  தீபக்கின்  கடன்  விவகாரத்தில்  ஹசான்  சம்பந்தப்பட்டிருப்பதாகக்  கூறி  அதற்குச்  சான்றாக  ஒரு  கடிதத்தைக் காண்பித்தார்.

அக்கடிதத்தில்,  தீபக்மீது  சட்ட நடவடிக்கை  எடுப்பதைத்  தள்ளிப்போடும்படியும்  மாதத்தவணையாக  ரிம270,000   செலுத்தி  10ஆண்டுகளில் கடனைக்  கட்டித்தீர்க்க  வகை  செய்யும்படியும்   கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.