அன்வார் இப்ராகிமின் பரம வைரியான டாக்டர் மகாதிர் முகம்மட், அவரின் துணைவியார் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் சிலாங்கூர் மந்திரி புசார் ஆவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பெண்கள், மந்திரி புசார் உள்பட தலைமைப் பொறுப்பேற்பதில் தவறில்லை என முன்னாள் பிரதமர் கூறினார்.
வான் அசிசா, சிலாங்கூர் மந்திரி புசார் ஆகலாம் என்று கூறப்படுவது பற்றிக் கருத்துரைத்தபோது மகாதிர் அவ்வாறு கூறினார்.
இஸ்லாமிய நாடுகள் ஆண்-பெண் வேறுபாடு பார்ப்பதில்லை என்றும் அவர்களின் திறமை மட்டுமே கவனிக்கப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.
பூந்துட்ட,கலக்கு ராசா,கலக்கு.இப்போ பார் உம்மை தலைமேல் வச்சு ஆடுவானுங்க,நாராயண நாராயண.
ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம்!!!!! ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்!!!!!
துன் கூரினால் சரியாகத்தான் இருக்கும்.
முன்னாள் பிரதமர் துன் அவர்களே சொல்லிவிட்டார் அப்புறம் என்ன தயக்கம் வான் அசிசா அவர்களே சிலாங்கூர் மாநிலத்தின் மெந்தெரி புசார் பதவிக்கு பருந்துரைகலமே பாகத்தான் கச்சி
மஹாதீருக்கு ஏன் இந்த திடீர் மன மாற்றம்? உண்மையை சொல்லுகிறாரா அல்லது கிண்டல் பண்ணுகிறாரா என்பது விளங்காமல் இருக்கிறது.
மலேசியாவில் பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.