யுக்ரேய்னில் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச் 17 விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தார் தகவல் பெறுவதற்காக கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் திரள்கின்றனர்.
பெயர்கள் பதிந்துகொள்ளப்பட்டு அவர்கள் புத்ரா ஜெயா மரியோட் ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு எம்ஏஎஸ் அவர்களுக்கு விளக்கம் அளிக்கும்.
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், எம்எச் 47 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தார். அதன் பயணிகள் “படுகொலை” செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று கூறிய கொலைகாரர்களைக் கூண்டில் ஏற்ற வேண்டும் என்றார்.
மரணமுற்ற அனைவரின் குடும்பங்களுக்கும் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அன்வாரே! வெறும் முன்னூறு பேர்தானே. லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த நரகாசுரன் ராஜ பக்சேவை கூட நாங்கள் எந்தக் கூண்டிலும் ஏற்றவில்லை. இந்த சின்ன விஷயத்துக்குப் போய் அலட்டிக் கொள்கிறீர்கள்.
நீதி, நீதிமன்றம் என்ற சொல்லை கேட்டாலே மக்கள் நக்கலாக சிரிக்கிறார்கள். இந்த துயர நேரத்தில் பிரதமர்தான் ” SWIFT JUSTICE ”
என்று கூறி மக்களை சிரிக்க வைக்க முயலுகிறார் என்றால்
நீங்களுமா !!!