ஈக்காத்தான் முஸ்லிம் மலேசியா (இஸ்மா) தலைவர் அப்துல்லா ஷேக் அப்ட் ரஹ்மான் மீதான வழக்கு அக்டோபர் 13 நாள் தொடங்கி மூன்று நாள்களுக்கு காஜாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நோர் ஹஸானி ஹம்சா, வழக்கு விசாரணைக்கான நாளை இன்று நிர்ணயித்தார்.
“Kedatangan pendatang China bersama penjajah British satu bentuk pencerobohan.” (பிரிட்டிஷாருடன் சீனக் குடியேறிகளும் வந்தது ஒரு வகை ஊடுருவலாகும்) என்ற கட்டுரையில் சீனர்களை ஊடுருவல்காரர்கள் என்று வருணித்ததற்காக அப்துல்லாமீது தேச நிந்தனை சட்டத்தின்கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் ரிம5,000 அபராதம் அல்லது முன்றாண்டுச் சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
வழக்கு நிறைவு பெற்றபின் அவருக்கு ”டத்தோ ஸ்ரீ பட்டம்” கிடைக்கலாம் !
மீறி போனால் என்ன! ஒரு சிறுதொகையை அபராதமாக விதிக்கப்படும்.. பிறகு நீதிமன்றம் நேர்மையாக நடந்துக்கொண்டுள்ளது என்று பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் தம்பட்டம் அடிப்பர். இது புதிதல்லவே??? இல்லேனா, இஸ்மாவும் பெர்காசாவும் அரசாங்கத்தே சும்மா விட்டுடுமா என்ன?? குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகப்பட்ச தண்டனையாக இரண்டையும் வழங்குவதாக தீர்ப்பளித்து மேல்முறையீடு மறுக்கப்படுவதாகவும் தீப்பளிக்கலாமல்லவா??? நான் பகல் கனவு காண்கிறேன் என்பது மட்டும் உறுதி!!!!
நின்று தான் பார்ப்போமே
சட்டம் தன் கடமையை செய்கிறதா என்று