எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு யுக்ரேய்ன் காரணமல்ல என்று கோலாலும்பூரில் உள்ள அதன் தூதரகம் கூறியுள்ளது. “ரஷ்ய-ஆதரவு கிளர்ச்சிக்காரர்களும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதமும்தான் அதற்குக் காரணம்” என்று அது கூறியது.
“யுக்ரேய்ன் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்ட நேரங்களில் எல்லாம் அதன் ஆகாயத் தற்காப்புச் சாதனங்களைப் பயன்படுத்தியது இல்லை என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்”, எனத் தூதரகத்தின் அறிக்கை தெரிவித்தது.
“அச்சம்பவம் நிகழ்ந்தபோது யுக்ரேய்னின் போர் விமானங்கள் எதுவும் வானில் பறக்கவில்லை”, எனவும் அது குறிப்பிட்டது.
இதனிடையே, இன்று சீனாவிலிருந்து திரும்பிய போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய், எம்எச் 17-இல் பயணம் செய்தோரின் குடும்பத்தினரை கேஎல்ஐஏ-இல் சந்தித்துப் பேசினார். ஆனால், அவர் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை.
தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், எம்எச் 17 தடைசெய்யப்பட்ட பகுதியில் பறந்ததால்தான் சுட்டு வீழ்த்தப்பட்டது எனக் கூறப்படுவதை மறுத்தார் என பெர்னாமா கூறியது.
அனைத்துலக விமானப் போக்குவரத்து சங்கமும் அந்த விமானம் பறந்த பாதை தடை விதிக்கப்பட்ட பாதை அல்ல என்றுதான் கூறியுள்ளது.
ஆனால், நியு யோர்க் டைம்சின் செய்தியொன்று ஏர் பிரான்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் போன்ற விமான நிறுவனங்கள் சில காலமாகவே ஆயுதப் போராட்டம் நடைபெறும் அப்பகுதிக்கு உயரே பறப்பதைத் தவிர்த்து வருவதாகக் கூறுகிறது.
என் தாய் நாட்டின் விமானத்தை சுட்டு வீழ்த்திய அந்த நாடு (ரஷ்யா)எங்கள் கண்ணீருக்கு பதில் சொல்ல வேண்டும்,இதை என் தாய் நாட்டின் அரசாங்கம் வுறுதி படுத்த வேண்டும்.295 வுயிர் கடவுளே என்ன கொடுமை.இன்று என் தாய் நாடு கண்ணிற் வடிகிறது.கொடுமைகாரர்களே…….இனி யாரும் வுயிரோடு விளையடதிர்கள்.
இந்த பாவத்தை செய்தவன் .எவனாக இருந்தாலும் ,நீதியின்முன் நிறுத்தப்படவேண்டும் ,துயரத்தில் இருக்கும் அனைவர்க்கும் அனுதாபங்கள்
இது ஒரு பெரிய முட்டாள் செயல் , தீவீரவாதி கூட ஒப்புக்கொள்ளமாட்டான் ! அனைத்து பயணிகளின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் !
அப்பாவிகளைக் கொல்வதில் வீரமில்லையே! சிறிது கூடவா மனிதாபிமானமில்லை?தவறு செய்யாதவர்களை தண்டிப்பதில் என்ன நியாயம்?கொலைகாரர்களே ஒரு நிமிடமாவது சிந்தியுங்கள்.
இங்கே வாழ்வது சில காலம் அதற்குள் ஏனோ அகம்பாவம் இதத்துவதை உணர்ந்தவன் எந்த கொடூர செயலுக்கும் உடன்பட மாட்டான் இங்கு அப்படியா நடகின்றது ?மதத்திற்கும் ,இனதிற்கும் அல்லவா முதல் இடம் கொடுத்து அழிகிறார்கள் மனித நேயம் செத்து பலகாலம் ஆகிவிட்டது !!!!!!!