நேற்று, ஐரோப்பிய பாதுகாப்பு, ஒத்துழைப்பு நிறுவனத்தின் கண்காணிப்பாளர்கள்(ஓஎஸ்சிஇ), கிளர்ச்சிப் படையினர் வசமுள்ள யுக்ரேய்னின் கிழக்குப் பகுதியில் மலேசிய விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தைப் பார்வையிடச் சென்றபோது துப்பாக்கிக்காரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
தடை இருக்காது என்று நினைத்து விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தைப் பார்வையிடச் சென்றதாக ஓஸ்சிஇ பேச்சாளர் மைக்கல் பொச்யூர்கிவ் கூறினார்.
“அந்த இடத்தை அடைந்தபோது ஆயுதமேந்திய பலர் எதிர்பட்டனர். அவர்கள் மரியாதைக்குறைவாகவும் ஒழுங்குமீறியும் நடந்து கொண்டார்கள். சிலர் போதையில் இருந்ததுபோலவும் தெரிந்தது”, என்றாரவர்.
கண்காணிப்பாளர்கள் 75 நிமிடங்கள் அங்கு இருந்துவிட்டுத் திரும்பிச் சென்றனர். இன்று அவர்கள் மீண்டும் அங்கு செல்லவும் நாள் முழுவதையும் அங்கேயே செலவிடவும் தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஏன் இந்த விஷ பரீட்சை.அனுமதி இன்றி போர் பூமிக்கு செல்வது எந்தவகையிலும் பாதுகாப்பற்றது.
44 பேரைத் தேட 100க்கு அதிகமானோர் சென்றது ஏன்?