செயற்கைக் கோள் படங்கள், எம்எச்17-ஐ சுட்டுவீழ்த்திய ஏவுகணை புகையைக் கக்கியவாறு தரையிலிருந்து விண்ணுக்குப் பாய்ந்து செல்வதைக் காண்பிக்கின்றன. அகச்சிவப்பு உணரிகள் விமானம் வெடித்தைப் பதிவு செய்துள்ளன.
இவற்றை வைத்து ஏவுகணையைப் பாய்ச்சியவர்கள் யார், ஏன் பாய்ச்சினார்கள், எங்கிருந்து பாய்ச்சினார்கள் முதலிய விவரங்களைக் கண்டறியும் முயற்சியில் அமெரிக்க ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அந்த ஆய்வின் முடிவுகளை வைத்துதான் அனைத்துலக சமூகம், விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவத்துக்கு எதிரான அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும்.
இதனிடையே, ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் சமந்தா பவர் “தரையிலிருந்து விண்ணுக்குப் பாயும் எஸ்ஏ-11 ரக ஏவுகணைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரிவினைவாதிகள் வசமுள்ள கிழக்கு யுக்ரேய்ன் பகுதியிலிருந்து பாய்ச்சப்பட்டிருக்கிறது” என்பதுதான் அமெரிக்காவின் கணிப்பு எனக் கூறியுள்ளார்.
அமெரிக்கா முதலில் MH370 மாயமான விமானத்தை கண்டு பிடிக்கட்டும். பிறகு இதைபற்றி பார்ப்போம். இவர்கள் சொல்வது எல்லாம் கணிப்பு தானே தவிர வேறு ஏதும் இல்லை.
Siddque அவர்களே. MH370 விமானம் தடையங்களின்றி காணாமல் போனது தாங்கள் அறிந்ததே. ஆனால் MH17 அப்படியன்று. திவிரவாதிகள் அதனை வீழ்த்தியுள்ளனர். ஆகவே அமெரிக்கர்களின் கடட்பாடு வரவேட்கவள்ளது.
MH370 சுட்டு வீழ்த்தியது அமெரிக்க தீவிரவாதிகள்,MH 17 சுட்டு வீழ்த்தியது ரசிய தீவிரவாதிகள். உண்மை ஒரு நாள் வெளியாகும்.