நாடாளுமன்ற அவசரக் கூட்டம் எம்எச்370 தையும் விவாதிக்க வேண்டும், கிட் சியாங்

 

MH17Kitsiang1எதிர்வரும் புதன்கிழமை தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற அவசரக் கூட்டம் எம்எச்17 பேரிழைப்பை விவாதிப்பதோடு எம்எச்370 காணாமல் போனதையும் விவாதிக்க வேண்டும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்று கூறினார்.

இரண்டு பேரிழப்புகளுக்கிடையில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. முதல் இழப்பு இன்னும் ஒருMH17Kitsiang2 பெரிய மர்மமாக இருந்து வருகிறது. இரண்டாவது இழப்பு மனித இனத்திற்கு எதிரான ஒரு கிரிமினல் குற்றம் என்று அவர் விவரித்தார்.

“எம்எச்17 ஐ போல, எம்எச்370 க்கும் முழுமையான, முறையான பொறுப்புடமை இருக்க வேண்டும். அதற்கு காணாமல் போன அந்த விமானம் கண்டுபிடிக்கப்படும் வரையில் காத்திருக்க முடியாது”, என்று கிட் சியாங் இன்று விடுத்த அறிக்கையில் மேலும் கூறினார்.

“வரும் புதன்கிழமை, எம்எச்370 மற்றும் எம்எச்17 ஆகிய இரண்டு பேரிடர் சம்பவங்கள் குறித்த இரு தனிப்பட்ட அதிகாரப்பூர்வமான அறிக்கைகளை அரசாங்கம் தாக்கல் செய்ய வேண்டும்”, என்று அவர் கேட்டுக்கொண்டார்.

லிம் கிட் சியாங் விடுத்துள்ள வேண்டுகோள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.