உக்ரேனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதன் தொடர்பில் இன்று ஐநா பாதுகாப்பு மன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அத்தீர்மானம், விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதைக் கண்டிப்பதுடன் அச்சம்பவத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துப் பொறுப்பாக்க வேண்டும் என்றும் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் கிளர்ச்சிப்படையினர் எவ்வித மாற்றத்தையும் செய்யக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளும்.
அச்சம்பவத்தில் 28-பேரைப் பறிகொடுத்த ஆஸ்திரேலியாவால் வரையப்பட்ட அத்தீர்மானத்தை ரஷ்யா ஆதரிக்குமா என்பது தெரியவில்லை.
ரஷ்யாவைச் சாந்தப்படுத்தும் நோக்கத்தில் “சுட்டு வீழ்த்தப்பட்ட” விமானம் என்பதற்குப் பதிலாக “வீழ்த்தப்பட்ட” விமானம் என்று தீர்மான வாசகத்தில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.
உள்ளதை உள்ளவாறு சொல்லி நீதியை நிலை நாட்ட முடியாத ஒரு சபைக்கு பெயர் “ஐக்கிய நாட்டு சபை”. இன்றும் இதை நம்பி வாழுகின்றார்களே இன்றைய மக்கள்!. பஞ்சாயத்து நாட்டாமையே பயிரை மேய்ந்தால், அங்கே என்ன பஞ்சாயத்து வேண்டிக் கிடக்கு.