கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், “அல்லாஹ்” என்னும் சொல்லைக் கொண்டிருந்ததற்காகக் கைப்பற்றப்பட்ட எட்டு கிறிஸ்துவ சமய குறுவட்டுகளை(சிடி) உரியவரிடமே திருப்பிக் கொடுக்குமாறு உள்துறை அமைச்சுக்கும் அரசாங்கத்துக்கும், ஆறாண்டுகளுக்குப் பிறகு, இன்று உத்தரவிட்டது.
2008, மே மாதம் சரவாக்கிய கிறிஸ்துவரான ஜில் அயர்லாந்திடமிருந்து அந்த சிடி-கள் கைப்பற்றப்பட்டன.
சிடி-களைக் கைப்பற்றவும் அவற்றைத் தடுத்து வைக்கவும் சுங்கத்துறையின் மூத்த அதிகாரி சூசனா முயின் உத்தரவிட்டது சட்டவிரோத செயலாகும் என்று தீர்ப்பளித்த நீதிபதி ஸலேகா யூசுப், உள்துறை அமைச்சருக்கே அந்த அதிகாரம் உண்டு என்றார்.
“எனவே, சிடி-களை வாதியிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும்”, என நீதிபதி ஸலேகா ஆணையிட்டார்
எனி கொமெண்ட் ஜாய்ட் இப்ராஹிம்??? உமக்கு அதிகாரம் இருக்கிறதாம்.. உத்தரவு எப்போது??? சரவாக் எலேக்ச்சன் வேற கிட்டே வருது!!! எப்படி வசதி????
மேல் முறையீட்டில் வேறொரு தீர்ப்பு வரும் வரை காத்திருங்கள். உடனே துள்ளிக் குதிக்க வேண்டாம்.
நீதிமன்ற உத்தரவை இப்போது யாரும் மதிப்பதில்லை. பெர்காசவுக்கு இருக்கும் அதிகாரம் கூட நீதிமன்றத்துக்கு இல்லை. துள்ளிக் குதிக்க என்ன இருக்கிறது!
நாளை வேறு கதை சொல்வார்கள் காத்திருப்போம் !
கூறப்பட்ட கருத்துகளை பார்த்தல் இறைவனுக்கு அடுத்து நீதியாசனத்துக்கு கொடுக்க வேண்டிய மதிப்பை நமது நீதியாசனம் இழந்துவிட்டது போல் தெரிகிறது. நீதியை நிலைநிறுத்த வேண்டிய நீதிபதிகளே அநீதியாக தீர்ப்பு கூறினால், யார் என்ன செய்ய முடியும்? இன்று கொடுக்கப்பட்ட தீர்வு நாளை மாற்றப்படுமோ அல்லது அமல்படுத்துவது தடுக்கப்படுமோ என்றொரு அவநம்பிக்கையை ஏற்படுத்திவிட்டது. குறிப்பிட்ட இனத்தவரோடும், சமய்த்தவரோடும் நமக்கிருக்கும் பிரச்சினைகள் எதுவானாலும் நீதியாசனத்திர்க்கு கொண்டுபோனாலும் நீதி கிடைக்குமா? எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திடு. மனம் தளரவேண்டாம். இறைவன் நம்மை அசீர்வதித்து எல்லோரையும் நீதியான நல்வாழ்வுக்கு வழிநடத்துவாராக.