மேலும் ஒரு மலாய்ப் பெண் டிஏபி-இல் சேர்ந்திருப்பது கண்டு ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா(இஸ்மா) கொதித்துப் போயுள்ளது.
அது, இளம் மலாய்க்காரர்களை எளிதில் “ஏமாற்றுவதில்” டிஏபி வெற்றிகண்டு வருவதைக் காண்பிப்பதாக இஸ்மாவின் உதவித் தலைவர் அப்துல் ரஹ்மான் மாட் டாலி கூறினார்.
அவர், ஷபுரா ஒத்மான் அண்மையில் டிஏபி உறுப்பினரானது பற்றிக் கருத்துரைத்தபோது இவ்வாறு கூறினார்.
இளவயது மலாய்க்காரர்களுக்கு அவர்களின் வரலாறு, இஸ்லாம், கூட்டரசு அரசமைப்பில் உள்ள சமுதாய ஒப்பந்தம் பற்றியெல்லாம் தெரியாது.
“தெரிந்திருந்தால் அவர்கள் டிஏபி-இல் சேர மாட்டார்கள்”, என ரஹ்மான் கூறினார்.
“இப்பெண்களை அங்குமிங்கும் அழைத்துச் சென்று மலாய்க்காரர்களுடனும் இஸ்லாத்துடனும் தங்கள் கட்சி தோழமை உணர்வு கொண்டிருப்பதாக டிஏபி தலைவர்கள் காண்பித்துக்கொள்வார்கள்.
“இவையெல்லாம் இன்றைய இளம் மலாய்க்காரர்கள் அவர்களின் அடையாளத்தை இழந்து வருவதற்கான அறிகுறிகள்”, என்றாரவர்.
உங்களுடைய வரலாறு, இஸ்லாம், சமுதாய ஒப்பந்தம் உங்களுக்குத் தெரிந்திருந்தால் இப்படி ஒரு கருத்தே உங்களிடம் இருந்து வந்திருக்காதே! அனுதாபங்கள்!
இஸ்மா, பெர்கசா ,அம்னோவின் அடையாளம் கண்டு கொண்ட இளம் மலாய் காரர்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள் ,
இது என்ன பெரிய செய்தியா, விட்டுத் தள்ளுங்கள், இப்படி விளம்பரம் தேடுவது டி.ஏ.பி கட்சிக்கு ஒரு கேவலமாகும்.
எங்களுக்கும் உங்கள் மேல் இதுதான் மெத்த ஆதங்கம். இஸ்லாமின் மேன்மையான போதனைகள், கூட்டரசு அரசியலைப்பு, “சமூதாய ஒப்பந்தம்” ஆகியவைகளை உங்களைப்போன்ற ‘கத்தும் மிராண்டிகள்’ முறையாக, முழுவதும் புரிந்துக் கொள்ளாமல், அரசிடம் அவ்வப்போது மானியம் பெற, சிறு2வற்றிற்கு எல்லாம் தூவேச ஒப்பாரி வைக்கிறீர்களே…!!?? (பின் குறிப்பு: அப்துல் ரஹ்மான், உங்கள் கவனத்திற்கு. நமது கூட்டரசு அரசியல் அமைப்பில் எந்தப் பகுதியிலும் சமூக ஒப்பந்தம் என்ற வாசகம் இல்லை. அது 1980களில் திடீரென்று umno-வால் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் அற்புதக் கண்டுபிடிப்பு..!!)
மனசாட்சி உடையவர்கள் நியாயம் , நீதி உள்ளா பக்கம் தான் நிற்பார்கள் அதில் உனக்கு என்னா காண்டு ?
சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் இனங்களுக்கிடையே புரிந்துணர்வில்லை;ஒற்றுமை இல்லை. இனங்களுக்கிடையே ஒற்றுமை வரவே கூடாது என ஒரு கூட்டம், அதாவது மூச்சிக்கு முன்னூரு தரம் கடவுள்… கடவுள்… என்று பீற்றும் கூட்டம் விரும்புகிறது. குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுதான் இவர்களின் இனத்தொழில். துங்கு கடைசி காலத்தில் ஒன்று சொன்னார். ” மலேசியா பல்லின மக்கள் வாழும் நாடு. மக்களிடையே ஒற்றுமை இல்லாவிட்டால் நாடு சீரழிந்துவிடும். இந்த நாட்டில் எல்லோருக்கும் தேவைக்கதிகமான வளம் இருக்கிறது. யாரும் பின்தங்கிவிட மாட்டார்கள். ஒற்றுமையாக பங்கிட்டு வாழ்ந்து எதிர்கால சந்ததியினர் வாழ வழிவகை செய்திட இனங்களுக்கிடை ஒற்றுமை அவசியம்.” என்றார். ஒரு மனிதன் கடைசி காலத்தில் சொல்லும் கருத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே அனுபவ வார்த்தையாக இருக்கும். வள்ளலாரின் கடைசிகால கருத்துகளே சிறப்பானதாக அமைந்ததும் அந்த வகையில்தான். ஆனால் , பொறுப்பில்லா சுயநலக் கூட்டம் , இனவெறிப்பிடித்தக் கூட்டம், மதவெறிப்பிடித்தக் கூட்டம், அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மக்களின் உணர்ச்சியைக் கிளறிவிட்டு வேடிக்கை காட்டுகிறார்கள்.
இதுக்கு பேர் தான் அரசியல்,வாழ்க நாராயண நாமம்.
வரலாறுன்னு இருக்கா உங்களுக்கு ??? எப்ப கண்டு பிடிச்சிங்க ???
பரமேஸ்வரா ஆட்சிக்கு முன்னரா ??? அல்லது பின்னரா ???
” HANG ” TUAH யார் ??? ” HANG ” JEBAT யார் ??? ” KRIS ” எங்கிருந்து வந்தது ??? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை உண்டா ???
உங்களுக்கு ஹங்துவா பிடிக்குமா,ஹங் ஜெபாட் பிடிக்குமா,ஹங்துவா அரசாங்க ஏஜன்ட் ஆனால் ஹங் ஜெபாட் நல்ல நன்பர்,யார் உங்கள் தேர்வு.வாழ்க நாராயண நாமம்.