சரவாக் பக்காத்தானிலிருந்து வெளியேறுவது “அவசியம் என்று டிஏபி நினைத்தால்” தாராளமாக வெளியேறலாம் என சரவாக் பாஸ் கூறியுள்ளது.
சரவாக் டிஏபி நேற்று ஓர் அறிக்கையில், கிளந்தானில் ஹுடுட்-டை அமலாக்கும் நோக்கத்தை பாஸ் தலைமைத்துவம் கைவிடாவிட்டால் மாநிலக் கூட்டணியிலிருந்து வெளியேற கட்சியில் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பதாகக் கூறியது.
சரவாக் பாஸ் ஆணையர் ஆடம் அஹிட், கிளந்தானில் ஹுடுட் கொண்டுவருவது பக்காத்தான் ரக்யாட் அமைக்கப்படுவதற்கு முன்பே உருவான திட்டம் என்றார். முஸ்லிம்களுக்காக அச் சட்டத்தைக் கொண்டுவரும் உரிமை பாஸுக்கு உண்டு என்றும் அவர் சொன்னார்.
“வெளியேறுவது அவசியம் என்றால் டிஏபி தாராளமாக வெளியேறலாம். பாஸ் அதைத் தடுக்காது. ஆனால், விவேகமற்ற எந்த முடிவும் ஓர் அமைப்பையே நாசமாக்கி விடலாம் என்பதை பாஸ் வலியுறுத்த விரும்புகிறது”, என ஆடம் கூறினார்.
கூட்டணிக் கட்சியில் எந்தவொரு பிரச்னையானாலும் “உள்ளுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர” ஒரு கட்சி தனியே தீர்மானம் நிறைவேற்றுவது சரியல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.
நட்டப் படப் போவது ஜ.செ.க. அல்ல என்பதால் சரவாக் பாஸ் சொல்லி ஆகப் போவது என்னவோ?.
சரவாக்காரர்கள் ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கிறார்கள்.
முடிவு எடுத்திருக்கார்களா?? என்னா முடிவு?