சிலாங்கூர் சுல்தான் ஷராபுதின் இட்ரிஸ் ஷாவைச் சந்திக்க ஷா ஆலம் எம்பி காலிட் அப்துல் சமத் செய்து கொண்டிருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
அந்த பாஸ் எம்பி தம் செயலுக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்பதுதான் அதற்குக் காரணமாகும்.
சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்ற(மாயிஸ்)த்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று காலிட் கூறியதை சுல்தான் கண்டித்திருந்தார். அதைப் பற்றி விளக்கமளிக்கவே காலிட், சுல்தானைச் சந்திக்க விரும்பினார்.
ஆனால், அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பதையும் அதற்கான காரணத்தையும் சிலாங்கூர் சுல்தானின் தனி செயலாளர் முகம்மட் முனிர் பானி இன்று அறிவித்தார்.
கடிதத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தால் சுல்தான் ஷராபுதின் அவருக்குப் பேட்டியளிக்க சம்மதித்திருக்கலாம் என முனிரை மேற்கோள்காட்டி எஜண்டா டெய்லி செய்தித்தளம் கூறியிருந்தது.
காலிட்: நான் நன்றி சொல்வேன் என்னைக் கண்டு கொள்ளாததற்கு, நானும் நன்றி சொல்ல சொல்ல நாளும் என்னை வெறுப்பதென்ன?.
மாயிசின் அதிகாரத்தை குறைக்க கோரியது எந்த வகையில் தவராகும்,பின் எதற்கு சிலாங்கூரில் அரசாங்கம்.நாராயண நாராயண.
என்ன சொன்னால் சுல்தான் அவர்கள் கோவித்துக்கொள்ள மாட்டார் என்ற கையேடு இருந்தால் நலம் !
பல்கலை கழகங்களில் இஸ்லாத்தை ஒரு பாடமாக படிக்க சொல்கிறார்களே அது எப்படி ?? இஸ்லாத்தை படிக்க வேண்டும் என்றால் அந்த சொல்லை சொல்லியாக வேண்டுமோ ??
யாவரும் எம் மக்கள் என்ற எண்ணம் அனைத்துமட்ட தலைவர்களுக்கும் இருப்பது சிறப்பு. ஆனால், அதைக் காண வேண்டியவர்களிடம் காண்பது அரிதாகிவிட்டது. இறைவனை வழிபடுவதில்தான் எத்துனை போராட்டங்கள்!! சுயநலத்தினால் வழிபாட்டு உரிமையும் கேள்விக்குறியாகிறது. ஒருசில வேளைகளில் அவமதிக்கவும்படுகிறது. இறைவா நீ ஒருவனே. உம்மை வழிபட போராட்டம் தேவையா?? என்னதான் ஆடினாலும் அவன் கட்டளையிலிருந்து தப்ப முடியாது. இறுதியில் ஆண்டவனுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்!!!!!! ஆடாதேடா..ஆடாதேடா மனிதா, நீ ஆடிவிட்டு அடங்கிடுவே மனிதா!!!!! ஆண்டவன் தீர்ப்பு!!!!
சிலாங்கூர் சுல்தான் அவர்கள் மென்மையானவர் , எதிலும் அவசரம் இல்லாமல் யோசித்து முடிவெடுப்பவர் ! பொதுநலத்தில் அக்கறை உள்ளவர் .அவரின் கோபத்திற்கு காரணம் தவறான ” தூபத்தின் ” விளைவோ என்று என்ன தோன்றுகிறது . எங்கோ எதுவோ தப்பான கருத்துக்கள் அவரின் காதுக்கு போய் இருக்கவேண்டும் ! உண்மையின் சுடரொளி ஒருநாள் வெளிவரும் !!
ஐ எக்ரீ வித் யூ ராஜுல்லா. தம் மக்களின் நலனைக் கருதி மத விவகாரத்தில் தடுமாறாமல் இருந்தால் நலமே!!!!