மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச் 17-ஐ சுட்டு வீழ்த்தியதில் மாஸ்கோவுக்கும் பங்குண்டு என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்கா கூறுவதை மலேசியாவுக்கான ரஷ்ய தூதர் லியுட்மிலா ஜி வொரோப்யேவா மறுக்கிறார்.
இதற்கு முன்னரும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை வாஷிங்டன் சொன்னதுண்டு ஆனால், எதையும் நிரூபித்ததில்லை என்றாரவர்..
“முதலில், ஆதாரத்தைக் காண்பிக்கட்டும். ஈராக்கில், (ஈராக்கிய அதிபர்) சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருந்தார் என்பதற்கு ஆதாரங்கள் காண்பிப்பதாக அமெரிக்க அரசாங்கம் உறுதி கூறியது.
“இன்னும்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்”, என்றவர் ரஷ்ய தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
உத்தம புத்திரர்களான அமெரிக்காவும், ரஷியாவும் சொல்லும் வாடிக்கையான பழமொழி இது. இந்த உலகத்தின் எவ்வொரு மூலையிலும் ஏற்படும் கலவரங்களில் இந்த இரு நாடுகளின் அல்லது இவர்களின் கூஜாக்கள் கைகள் தலைமறைவாகவும், நேரிடையாகவும் செயல் படுவது நாம் பார்த்த வரலாறுதான். MH 17 விமானத்தின் பின்னே யுக்ரெனின் ஜெட் விமானம் பறந்து வந்தது என்று கூறும் ரஷியா, இந்த விமானத்தை தாக்கிய ஏவுகணை, தரையில் இருந்து விண்ணுக்குப் பாய்ச்சப் படாத அல்லது அந்த உக்ரேனின் போர் விமானத்தில் இருந்து பாய்ச்சப் பட்டதா என்று சொல்லாமல் நழுவுவது ஏன்?. மாஸ்கோவில் தளபதிகள் கொடுத்த செய்தி விளக்கத்தைக் கொண்டு அப்படியே கிளிப் பிள்ளைப் போல் இங்கே ஒப்புவிப்பதை நம்ப மலேசியர்கள் தயாராக இல்லை. இதற்கு அனைத்துலக ரீதியிலான நீதி விசாரணை தேவை.
ரெண்டு பெரும் கூட்டு களவாணிகள்
அனைத்துலக வான் போக்குவரவு நிறுவனம் ரஷ்ய / உக்றேன் போர் நடவடிக்கைகள் உள்ள பகுதியின் மேல் செல்ல வேண்டாம் என தெரிவித்த பின்னும் . ஏன் மலேசிய விமானம் அப்பகுதியில் பறக்க வேண்டும்? .பின்குறிப்பு : மற்ற நாட்டு விமானங்கள் மலேசிய விமான பாதையில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரம் பரந்துள்ளது .எம் எச் 370 சீனாவை நோக்கி வடக்கே செல்ல வேண்டியது என் திரும்பி தெற்க்கே இந்திய பெருங்கடல் பகுதிக்கு வரவேண்டும் ? சிந்தியுங்கப்பா !!!
எங்கேயோ கோளாறு