டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் த ரோக்கெட் என்ற தளத்தில் தியோ பெங் கோக் மரணம் குறித்து சமீபத்தில் வெளியிட்டிருந்த கருத்து குறித்து அவரிடம் விரைவில் போலீஸ் வாக்குமூலம் பெறும்.
கிட் சியாங் வெளியிட்டுள்ள கருத்து தேச நிந்தனைக் கூறுகளைக் கொண்டிருப்பதால் போலீஸ் பல புகார்களைப் பெற்றுள்ளது என்று ஐஜிபி காலிட் அபு பாக்கார் கூறுகிறார்.
“அக்கட்டுரையில் அவரது சொற்கள் தேச நிந்தனையானவைகளாக இருக்கலாம். தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் லிம்மை நாங்கள் விசாரிப்போம்”, என்று காலிட் நேற்று கோலாலம்பூரில் கூறினார்.
“தியோ பெங் கோக் கொல்லப்பட்டதற்கு நியாயம் கிடைக்கும் வரையில் மலேசியர்கள் ஓயமாட்டார்கள்” என்ற தலைப்பில் லிம் கிட் சியாங் எழுதியிருந்த கட்டுரையில் தியோவை கொன்றவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
கிட் சியாங் வெளியிட்டுள்ள அறிக்கை தியோவின் மரணம் ஒரு கொலை என்று மக்களை நம்பவைக்கும் ஒரு முயற்சி என்று காலிட் கூறினார். “உண்மையற்ற ஒன்றை உருவாக்க முயற்சிக்க வேண்டாம். அது மக்களைச் சினமடயச் செய்வதோடு சந்தேகத்தை வளர்க்கும்”, என்றார் காலிட்.
தியோ பெங் கோக் ஜூலை 16, 2009 இல் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் 14 ஆவது மாடி அலுவலகத்தில் வாக்குமூலம் அளித்த பின்னர் அக்கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
போலீஸ் எல்லா விசயத்திலும் முறையாக பாகுபாடின்றி நடந்து கொள்ள வேண்டும். தவறு செய்தவர்கள் இனியும் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தகுந்த முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.
நாங்கள் கிட் சியாங்கை கொஞ்சங்கூட நம்பலே. போலீசத்தான் முழுசா நம்புறோம். மலேசியா போலீசா கொக்கன்னானா. சூப்பெர்லா மலேசியா போலிஸ். இப்பே திருப்திதானே என்னோட ஸ்டேட்மென்ட்?
இறந்தவர்,கொள்ளப்பட்டவர் தரப்பில் சந்தேகம் வந்துவிட்டது அது அவர் உரிமை விளக்கம் தரவேண்டியது சம்பந்தப்பட்டவரின் கடமை.அதை விடுத்து மிரட்டுவது ஆரோக்கியமான செயல் அல்ல.மீண்டும் விசாரணை துவங்க தயங்குவது ஏன்?.சட்டங்கள் மக்களை காக்கவே,பயமுருத்த இல்லை.வாழ்க நாராயண நாமம்.
antha போலீஸ் தலைவர் hindraf பை விடுதலை புலியுடன் இணைத்தார் அப்போது ,இதுவரை நிருபிக்க முடியவில்லை .போலீஸ் தலைவர் கருத்து தேச நிந்தனைக் கூறுகளைக் கொண்டிருப்பதால் அவரும் குற்றவாளியே .
மாமியார் உடைத்தால் மண் சட்டி! மருமகள் உடைத்தால் பொன்சட்டி !இது என்னா நியாயம் ?இவகளின் நியாயம் கடவுளுக்குதான் வெளிச்சம் !
மலேசியப் போலீஸ் ஒருதலைப் பட்சமானது என்பது உலகறிந்த விஷயம். இதை லிம் கிட் சியாங் சொல்ல, அவருக்கு அருகதைக் கிடையாது. இவரும் இவரைச் சார்ந்த கட்சியும் ஒருதலைப் பட்சமானவர்களே. போலீஸ் லாக்கப்புகளில் பல நூறு தமிழ் இளைஞர்களை பாதுகாப்புத் துறை சித்திரவதை செய்து கொலைகளையும் செய்துள்ளது. அவர்களது விஷயங்களில் காட்டாத அக்கறை இந்த ஒரே ஒரு சீன இளைஞனைப் பற்றி ஐந்து வருடங்களாக இவர் பேசாத நாளே இல்லை. டி.எ.பி. முன்பு போல இல்லை. இனவாதம் தலைவிரித்தாடுகிறது.