லிம் கிட் சியாங்கும் அன்வார் இப்ராகிமும் எம்எச் 17 விவகாரத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கையாளும் விதத்தைப் பாராட்டியுள்ளனர்.
மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனும் டிவிட்டரில் பிரதமரைப் பாராட்டினார்.
கறுப்புப் பெட்டிகளைப் பெறும் முயற்சியில் நஜிப் வெற்றி பெற்றதற்காக லிம் பாராட்டுத் தெரிவித்துக் கொண்டார்.
“ஜூலை 17-இல், ஈவிரக்கமின்றி 298 பயணிகளையும் பணியாளர்களையும் கொன்றவர்களை நீதிமுன் நிறுத்துவதில் மலேசியர்கள் நஜிப்பும் அரசாங்கத்துக்கும் முழு ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றவர் கேட்டுக்கொண்டார்.
நியாயத்துக்கு மலேசியா மக்கள் அனைவரும் துணைவருவர் என்பதை இது உணர்த்துகிறது. சுயநலத்தின்பால் அரசியல்வாதிகள் மக்களை கொள்ளையடிப்பதிலேயே முழு கவனமும் இருந்தால் எதிர்ப்புதான் தொடரும்…
டோனெட்ஸ்க் மக்கள் குடியரசின் பிரதமர் அலெக்சாண்டர் பொரோடாய் க்கு நன்றி.
ALEXANDER BORODAI -க்கு நன்றியும், DONETSK PEOPLE’S REBPUBLIC போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ALEXANDER BORODAI -க்கு நன்றியும், ” DONETSK PEOPLE’S REBPUBLIC ” போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
மனித நேயமில்லாத மக்கள் தான் இவர்கள் என்பதை இந்த
பேரிடர் சம்பவம் காட்டுகிறது ,சமய வாதிகள் தங்களின் சமய
நெறியை காற்றில் பறக்கவிட்டது புதிய செய்தியல்ல ,இறந்தவர்களை கூடவா பிணையாக வைத்து கொண்டு பேரம்
பேசுவது எங்கே போகிறான் மனிதன் ,அவன் மிருகமாக
மாறிக்கொண்டு இருக்கிறான் நைனா
நம்மதலைவர்களுக்கு எங்கடா மனிதநேயம் இருக்கு,,அவன் அவன் சுருடிக்கிட்டு போகதான் இருகாங்க,,எம்எச் 370 எம் எச் 17
இந்த பயங்கரவாத சம்பவத்தில் சமயவாதிகள் சம்பந்தப்படவில்லை என்பது ஆறுதலான செய்தி. இந்தப் பிரச்சனையில் நஜிப் காட்டிய வேகம் பாராட்டுக்குரியது என்பது சரியே!
இன்னிக்கி TV3 செய்திலே, யாராரோ நஜிப்பே பாராட்டுனதாக சொன்னாங்க…இந்த மூனு பேரும் பாராட்டுனது பத்தி வரவே இல்லே !!!!