ஹுடுட் விவகாரம் பற்றித் தாம் பேசுவதே இல்லை என்று சரவாக் டிஏபி குற்றம் சாட்டியிருப்பதை பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் மறுத்தார்.
ஜூலை 9-இல், சிலாங்கூர் கிளப்பில் நடந்த ஒரு கருத்தரங்கில்கூட அது பற்றிப் பேசியதாக அவர் சொன்னார்.
“இன, சமய வேறுபாடின்றி எல்லாருக்கும் நீதி தேவை என்றேன். அப்போது கிளந்தான் ஹுடுட் விவகாரம் பற்றியும் கருத்துரைத்தேன்”, என்றார்.
மேலும், கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமலாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் தீர்மானம் தனிப்பட்ட உறுப்பினர் ஒருவரால்தான் கொண்டுவரப்படுகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, மாநில பக்காத்தான் உறுப்புக்கட்சிகள் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.
“அதை பக்காத்தான் ரக்யாட் கொண்டுவரவில்லை. (பக்காத்தானில்) அதன்மீது கருத்தொற்றுமையும் கிடையாது”, என்றார்.