தாம் இன்னமும் சிலாங்கூரின் மந்திரி புசார்தான் என்பதை வலியுறுத்திய அப்துல் காலிட் இப்ராகிம், தம்மை வெளியேற்ற விரும்பினால் சட்ட முறைப்படிதான் அதைச் செய்ய வேண்டும் என்றார்.
முன்பு, அடுத்த தேர்தல்வரை மந்திரி புசாராக தொடர்வது உறுதி என்று சொல்லி வந்தவரின் பேச்சு இப்போது மாறியுள்ளது.
மந்திரி புசார் பதவி முடிவுக்கு வருவதை உணர்ந்துகொண்டவர்போல் பேசத் தொடங்கியுள்ளார்.
கட்சித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை மந்திரி புசாராக்கும் கட்சியின் முடிவை “மதிப்பதாக”க் கூறிய காலிட் அவர் பதவி ஏற்கும்வரை தாமே எம்பி என்பதை வலியுறுத்தினார்.
எனவே, “சிலாங்கூர் மக்களால் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட” தாம் தம் மந்திரி புசார் கடமையைத் தொடர்ந்து செய்யப்போவதாகவும் கூறினார்,
இது நல்ல அரசியல் தலைவருக்கு அழகு…மக்கள் தலைவர் முரன்பிடிக்கக்கூடாது.
too LATE U SAME LIKE UMNO