பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், சிலாங்கூர் மந்திரி புசாராக தம் மனைவியைத் தேர்ந்தெடுத்திருப்பது அவருக்கு மாநில அரசமைப்புப் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காண்பிப்பதாக சிலாங்கூர் பாரிசான் நேசனல் (பிஎன்) தலைவர் நோ ஒமார் கூறுகிறார்.
“மந்திரி புசாரை மாற்ற வேண்டுமானால் அதற்கு இரண்டு வழிகள்தான் உண்டு. இப்போதைய மந்திரி புசார் (அப்துல் காலிட் இப்ராகிம்) தானாக பதவி விலக வேண்டும் அல்லது சட்டமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும்”, என்றாரவர்.
பிகேஆர், அப்துல் காலிட்டுக்குப் பதிலாக சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கான வேட்பாளராக கட்சித் தலைவர் வான் அசீசாவைப் பெயர் குறிப்பிட்டிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது இவ்வாறு கூறினார்.
அட மங்கு, எல்லாமே முறையாத்தான் நடக்கும். பொறுத்திருந்து பாரடா!!!!
பெர்னாமா /RT இரண்டும் “அன்வாருக்கு ஆணவம்” என்று செய்தியில் நோர் ஒமார் சொன்னதை எழுதவில்லை ஏன்? இவருக்கு அரசியல் ஆணவம், அரசு ஆசை, PR கட்சிகளின் ஆமாம் சாமி எல்லாம் ஜால்ராக்கள். DAP யும் இப்போது திசை தெரியாமல் பறக்கிறது? தீர்மானம் போட்டு MB யை விலக்கும் அறிவாளிகள் ஏன் தெலுக் இந்தான் தேர்தல் வேட்ட்பாளர் தீர்மானம் போடாமல் “சாக் கொய்” சுட்டனர்? பாஸ் அறிவாளிகளை பாராட்டுவோம் தேவையா MB மாற்றம்?என்று யோசிக்க இவர்களுக்கு சிலங்கூரை ஆளும் திறமை வந்துவிட்டது பேஸ் பேஸ் பார்ப்போம் டிராமாவை. BN ஒன் தி மார்க்! கெட் ரெடி!! டாபார் !!! ஓடு ஓடு ஓடு ஒட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் ஓகே
அட மங்கு, பொறுத்திருந்து பாரும். எல்லாமே சரியாகத்தான் நடக்கும்.
ஒரு முன்னால் துணை பிரதமருக்கு தெரியாத இந்த விஷயம்.எல்லாம் சிறப்பா நடக்கும்.
ஆடு நெனைகிறது என்று ஓநாய்அழுததாம் !!!!!!!!!!!1
அடுத்த பொதுத்தேர்தல் வரை பொறுத்திருப்பதே அரசியல் பக்குவம். இதை அன்வார் ஏன் உணர மறுக்கிறார்? முன்பொரு முறை இப்படித்தான், நடுவண் [மத்திய] அரசையே மாற்றப் போவதாக கூறி பெரிய ரகளையே பண்ணி விட்டார். பக்காத்தானின் தலைவர் பதவியில் இருந்து அன்வார் ஒதுங்கிக் கொள்வது, நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும்.
சத்தியமாக நம்பிக்கை துரோகம் மட்டும் இல்லை ,கட்சியின் மீது உள்ள நம்பிக்கையும் ஊசுலாடுகிரது ,முதலில் நான்தான் அடுத்த பிரதமர் ,நடப்பில் பரிசான் ஆட்சியில் இருக்கும்போதே பரிசான் எம் பிகல் கட்சி தவா இருகிறார்கள் ஆட்சி மாற்றம் காண இருக்கிறது என்று ஆரம்பித்த அன்வார் ,காஜாங் சட்டமன்ற இடைதேர்தல் வரை தனுது சுயநலனுக்கும் தனது குடும்ப அரசியலுக்கும் மட்டுமே நாடகம் நடத்தி இருக்கிறார் என்பது உண்மை .முடிந்த தேர்தலில் அன்வாரை நம்பி யாரும் வாக்களிக்க வில்லை எனபது உண்மை ,ஜனநாயாக கட்சி மட்டும் கூட்டனியில் இல்லை என்றால் அன்வார் கடந்த பொது தேர்தல் முடிந்த கையோடு கட்சியை கலைக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பார் என்பது உண்மை .பதவி பேராசை அன்வரை சூல்ந்து கொண்டு இருக்கிறது என்பது உண்மை ,காஜாங் சட்ட மன்ற இடைதேர்தல் அன்வார் சுயநலத்துக்காக நடத்தப்பட்ட தேர்தல் என்பது வெட்ட வெளிச்சம் ,பிரதமர் கனவு கலைந்த பின்பு ,மாநில மந்திரி பெசாரக பதவில் அமர்ந்து கொள்ள எண்ணம் கொண்ட அன்வார் ,காலிட் இப்ராஹிமை கருப்பு ஆடாக மாற்றி இருக்கிறார் அன்வார் .தனுது காஜாங் நாடகம் தகுடுபொடியாக ஆனதால் அந்த சட்டமன்றத்தில் தனது பினாமியான மனைவியை வேட்பாளராக அமர்த்தினார் என்பது உண்மை உண்மை உண்மை .தற்பொழுது காலிட்டுக்கு ஏற்பட்டு இருக்கும் நெருக்கடியின் பின்னால் அன்வார் செயல்பட்டு இருப்பது வான் அஜிசா அடுத்த மந்திரி பெசார் என்று பிரகடனம் பண்ணியதில் இருந்து வெட்ட வெளிச்சமாக தெரிகிறது .அன்வார் மீது இனியும் மக்கள் நம்பிக்கை கொள்ள தயாராக இல்லை என்பது உண்மை ,கட்சியை தனது சுயநலத்துக்கு பயன்படுத்தும் அன்வாருக்கு கொடி பிடிக்க தயாராக இல்லை ,பேச்சியில் ,பிரசாரத்தில் அனல் பறக்கும் சொற்பொழிவை நடத்தி மக்களை அன்வார் இனியும் ஏமாற்ற முடியாது என்பது நிச்சயம் .
பாவாடை நாயகி, உங்கள் சுய கருத்தை மதிக்கிறேன். செலாங்கொர் அரசியல் நாடகம் இப்போதுதான் ஆரம்பம். பக்காத்தான் மீது கடந்த பொதுத்தேர்தலிலிருந்துதான் மக்கள் ஆதரவு அதிகரித்தது. சுயநலத்துக்காக அவசரப்பட்டு அதை கெடுத்திடமாட்டார்கள். பொறுத்திருந்து பாரும்
சப்பாத்து கால லேசா கடிச்சா அதே அப்பவே தூக்கி வீசிட்டு வேற சப்பாத்து போடுரது இல்லையா ?? அதுமாதிரிதான் இதுவும். விட்டால் புண்ணு பெருசாயிரும். அப்புறம் காலையே இழக்க வேண்டிவரும்…
பாவடை நாயகியே கட்சி தாவ தயாராய் இருந்த எம்.பிக்களை வெளிநாட்டுக்கு அழைத்துச்சென்று தாஜா பன்னினார்களே ஆளும் கட்சியினர் , அதை மறந்துவிட்டிர்கள?
அடிமட்ட கேனநயன் உளறுகிறான் .
இவனெல்லாம் அதி மேதாவிகள். பதவியில் உட்கார்ந்து உழைக்காமல் தின்று ஊரிப்போனதினால் வந்த வினை. மேற்கத்திய நாடுகளில் இப்படி பட்ட மர மண்டைகளுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள். எனினும் இனத்துவேஷம் அங்கு இருக்கின்றது ஆனாலும் இங்குள்ளது போல் இல்லை.அதிலும் ஈழத்தமிழர்கள் எத்தனை நாடுகளில் புகழிடம் கொடுக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாடு எவ்வளவோ செய்திருக்க வேண்டும். மலையாளிகள், கன்னடர்கள்,தெலுங்கர்கள் தமிழ் நாட்டில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றனர் – ஆனால் தமிழர்களுக்கு இடமில்லை. MGR – போன்ற மலையாளீகள் ஈழத்திற்கு உதவியவர்கள்-தமிழர்களாக வாழ்ந்தவர்கள். தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க கூட முடியாது என்றும் மற்றும் எவ்வளவோ குறிகிய எண்ணங்களுடன் செயல் படுகின்றனர். தமிழர்கள் ஏமாந்த சோணகிரிகளா?
நீலவாணன் ,உண்மையில் பரிசான் எம் பி கள் கட்சி மாறுவதற்கு இருந்தார்களா என்பதே சந்தேகம்தான் ?அப்படி இருந்தால் யார் அவர்கள் என்று அன்வார் பகிங்கிர படுத்த முடியுமா ?இல்லை மக்களை முட்டாள் ஆக்க அன்வார் நடத்திய சித்த விளையாட்டா ? ஒரு எம்பி கட்சி தாவுகின்றதானால் அன்வார் நிச்சயம் பிரதமர் ஆக முடியாது ,நிச்சயம் பல எம்பிகள் கட்சிகள் தாவ வேண்டிய நிலையில் அன்வாருக்கு ஆதரவாக செயல்பட துணிந்த அந்த ஆளும்கட்சி எம்பிகள் யார் யார் என்பதை வெளிச்சம் போட்டு காட்ட தயங்கியது ஏன் ? ஒருவேளை உங்கள் கதைபடி ,ஆளும்கட்சி எம்பிகள் சமாதனம் படுத்த பட்டார்கள் என்றால் அதை நம்புவதற்கு நாம் நாங்கள் விவரம் அறிந்த மக்கள் நிச்சயம் தயாராக இல்லை .காரணம் ,கட்சி தாவ இருந்த ஆளும்கட்சி எம்பிகளுக்கு ஒருவேளை அன்வார் பிரதமர் ஆகியிருந்தால் கிடைக்க வேண்டிய அனுகுலம் மிகபெரிய தாக இருந்திருக்கும் ,பாரிசானின் சமாதனத்திற்கு உடன் பட்டு இருக்க மாட்டார்கள் என்பது வெளிச்சம்பட்ட உண்மை .அன்வார் அன்று நடத்தியதும் ஒரு கபட நாடகம் என்பது உண்மை .மனைவி கட்சியின் தலைவி /சட்டமன்ற பதவி ,தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் /நாடாளமன்ற உறுப்பினர் ,மகள் உதவித்தலைவர் /நாடாளமன்ற உறுப்பினர் ,இதில் சிலாங்கூர் மாநில மெந்தரி பெசார் பதவி வேறு வேண்டுமாம் ,இப்படி ஒருகுடும்ப அரசியலில் பாதிக்க படுவது உண்மையான கட்சியின் உழைக்கும் தோழர்களும் ,நம்பிகையான திறமையான தலைவர்களும் மட்டுமே ?ஒரு சர்ச்சைக்குள்ளான மனிதனாக மாறிவிட்ட அன்வார் ,தனது சுயநலம் கருதி கட்சியை பாதாளத்துக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார் என்பது உண்மை .மக்களை முட்டாளாக்கி அரசியல் லாபத்தை தேடும் அன்வாரை எப்படி நம்புவது .