பினாங்கில் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பாக உள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் மாலிக் காசிம், அந்த வடக்கத்தி மாநிலத்தில் இஸ்லாத்துக்கு ஆபத்து என்று கூறிக்கொண்டிருக்கும் முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட்டை விளாசித் தள்ளியுள்ளார்.
முன்னாள் தலைமை நீதிபதியின் கூற்று “அர்த்தமற்றது, ஆதாரமற்றது, செவிவழி கேட்டதை வைத்துப் பேசப்பட்ட பேச்சு” என்று மாலிக் சாடினார்.
நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் ஆதாரமின்றி இவ்வாறு பேசக்கூடாது என்றாரவர்.
“பினாங்கில் இஸ்லாத்துக்கு ஆபத்து என்பதற்கு ஹமிட் ஆதாரம் காண்பிக்க முடியுமா. நாங்கள் இஸ்லாமிய அமைப்புகளுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்பதை நிரூபிக்க முடியுமா”, என மாலிக் சவால் விடுத்தார்.
நன்றி ஆட்சி குழு உறுப்பினர் அவர்களே,ஆதாரம் இல்லாமல் எப்படி இவர் இந்த கூற்றை கூறினார் ,நிதிபதிக்கு தெரியாத ஆதாரம் இல்லாமல் இவ்வாறு சொல்லமுடியாது என்று.
பித்து பிடித்தால் இப்படித்தான் உளறுவார்கள்… இது மதப் பித்து.
அப்படினா முன்னாள் தலைமை நீதிபதி ஆதாரம் இல்லாமல் எத்தனை கேசுகளில் தனது தீர்ப்பைக் கொடுத்தாரோ! தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்!
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் சைத்தான் ,
இவர் தனது தீர்ப்பில் முஸ்லிகள் பொய் சொல்லமாட்டார்கள் என குறிபிட்டுஇருக்கிறார் .குறிகிய மனப்பான்மை உடையவர் அப்படித்தான் பேசுவார்.