மந்திரி புசார் பதவியில் காலிட் இப்ராகிமுக்குப் பதிலாக டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயிலை அமர்த்தும் பிகேஆர் முயற்சி தொடர்பில் சட்டமன்ற உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
சிலாங்கூர் டிஏபி தலைவர் டோனி புவா, வான் அசீசாவை ஆதரிப்பதாக பெரித்தா ஹரியான் கூறியுள்ளது. பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி அப்பதவியை ஏற்பதுகூட அவருக்குச் சம்மதமே.
சிலாங்கூர் டிஏபி துணைச் செயலாளர் இங் சுவி லிம், பக்காத்தான் உச்சமன்றம் செய்யும் முடிவைத்தான் கட்சி ஆதரிக்க வேண்டும் என்று சினார் ஹரியானிடம் தெரிவித்தார்.
ஆனால், சிலாங்கூர் பாஸ் தலைவர் இஸ்கண்டர் அப்துல் சமத், பாஸ் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று கூறியிருக்கிறார்.
“சிலாங்கூர் பாஸுக்கு அது ஏற்புடையதல்ல…..மாநிலத்தை வழிநடத்திச் செல்ல காலிட்டின் சேவை இன்னும் தேவை என்பதே எங்களின் கருத்து”, என்றாரவர்.
பக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் இவ்விவகாரம் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
பக்காத்தான் உச்சமன்ற கூட்டம் செலாங்கொர் மக்களுக்காக நல்லதொரு முடிவினை எடுக்கட்டும். காலித்தின் விவகாரம் இஸ்லாமிய வங்கிக் கடனில் தொடங்கி தொடர்ந்தார்ப்போல் லங்காட் 2, கிடெக்ஸ் நெடுஞ்சாலை ஒப்பந்தங்களுக்கு பிறகே பதவி விலகல் அழுத்தம் தொடுக்கப்பட்டது. இதற்கு முன் நன்றாகத்தானே சென்றுகொண்டிருந்தது பக்காத்தான் ஆட்சி.
சபாஷ் சரியான போட்டி. டீலா நோ டீலா?
மக்களுக்கு சிறப்பான சேவை செய்தால் நல்லது.
பாஸ் மதில்மேல் பூனை போன்றது ! அதை நம்பினால் எந்த பக்கம் பாயும் என்று தெரியாது ?????????????
இது புதுப்படமில்லை ! ..உண்மை உணருவோம்!!
===========================================
சிவில் கட்டுமானம் துறையில் ஓர் வார்த்தை உண்டு IMPACT STUDY என்பார்கள். தாக்கு ,மோதல் ,முட்டுதல் என்பது இதன் பொருள்.
ஆனால் சிவில் துறையில் இதற்கு சில விதிகள் வைத்து புவி அமைப்பு அல்லது புவி இயல் ஒழுங்கு அதன் சாதக பாதக ஆய்வை வைத்து ஒரு கட்டடத்தை கட்டுவதற்கு முன்பு ….இது காட்டி முடிந்தால் ,இது நடக்கும் ஆதலால் இதை எல்லாம் செய்துவிட்டு இதை செய்தால், தாக்கு பிடிக்கும். முட்டாது ,மோதாது என்பதால் நிபுணர்களை வைத்து இந்த IMPACT STUDY செய்வது அவசியம் .
அரசு நிர்வாகம் குத்தகை நிறுவனங்கள் இன்னும் எல்லா துறை வல்லுணர்களும் அவர் அவர் தேவைகளுக்கு ஏற்ப வணிகயியலில் இதை முக்கிய கட்டமாக வைத்து முடிவு செய்வார்கள்.
ஆனால் ஒரு நாட்டை, தன மக்களை ஆள வேண்டிய அரசியல் தலைவனுக்கு இந்த தராதரம் எல்லாம் தேவை இல்லை. மன்னர் ஆட்சியானாலும், மக்கள் ஆட்சி (ஜனநாயக) ஆனாலும் கமுநிஸ்ட் ஆட்சியானாலும் சரி நாட்டு அரசியல் தலைவனுக்கு இந்த சமூகத்தை காத்து நிற்க வேண்டியவனுக்கு இந்த Social Impact Assesment (SIA ) விதி விளக்காய் போய் விட்டது.
சரி இதை படியுங்கள்…..Definitions for “social impact assessment” vary by
different sectors and applications. According to the International Association for Impact Assessment, “Social impact assessment includes the processes of analyzing, monitoring and managing the intended and unintended social consequences, both positive and negative, of planned interventions (policies, programs, plans, projects) and any social change processes invoked by those interventions. Its primary purpose is to bring about a more sustainable and equitable biophysical and human environment.” (International Association for Impact Assessment).
இதெல்லாம் அரசியல் வாதிகளுக்கு தேவை இல்லைதான்.ஆனால் மாநில, நடுவண் அரசு பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு இந்த நாற்றமே இல்லை என்றால் இவர்கள் நிர்வாகம் மற்றவர்களை நம்பி நம்பி மக்களை நடு தெருவுக்கு போன பல மாநிலங்களை நாடுகளை நாம் பார்த்தது உண்டு.
இந்த நிலை சிலாங்கூர் மாநில மக்களுக்கு வரும் அபாய கண்டத்தில் நாம் உள்ளோம். தன் மனைவி பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக மக்களை அடகு வைக்கும் அளவிற்கு ஒரு கட்சியின் தலைவன் தரம் தாழ்ந்து உளான்.
இதுவரை நாமெல்லாம் ஏமாளிகள் இவன் ஒரு கோமாளி என்பதை தெரியாமல் நம்மை மாற்ற முயற்சிகள் செய்தோம் ஆனால் இவன் மாறிதான் போய் விட்டான். அந்த மக்கள் கூட்டணி தலைகள் ஆமாம் சாமியில் அரசியல் மோசடிகள் நம்மை துரத்துகின்றன ! தூரம் என்பது ஒரு எல்லைதான் எல்லை முடிந்தபின் திரும்பி எதிரடி வரும்போது துரத்தியவன் காணாமல் போவான். கால ஏமாற்றம் வேறு கால தேவதை வேறு.
suthesiganin கருத்து சிந்தனைக்குரியது.நம் நாட்டு அரசியலில் மாற்றம் தேவை என மக்கள் விரும்பினார்கள். அதற்கு ஏற்றார்போல பக்காத்தான் அமைந்தது. ஆரம்பத்தில் திறம்படவே செயல்பட்டது. இப்போது, பாஸ் கட்சியை தவிர்த்து மற்ற இரு கட்சிகளான PKR,DAP, இரண்டும் குடும்ப உறுப்பினர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து, பக்காத்தானை சீரழிக்கின்றன.