இன்று நண்பகலில் கோலாலும்பூரிலிருந்து கிளந்தானில் கோத்தா பாரு நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு பேருந்தில் தீ பிடித்துக் கொண்டது. ஆனால். அதில் பயணித்த 39 பயணிகளும் இரண்டு ஓட்டுனர்களும் காயமின்றித் தப்பினர்.
கோலா லிப்பிஸ் அருகில் அவ்விபத்து நிகழ்ந்ததாக லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பிரெண்டெண்ட் அப்துல் ரசாக் ஹசான் கூறினார்.
“இயந்திரப் பகுதியிலிருந்து புகை வருவதைக் கண்டதும் ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி பயணிகளை வெளியேறும்படி கேட்டுக்கொண்டார்”, என்றவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
ஓட்டுனர் விரைந்து செயல்பட்டதன் பயனாக பயணிகள் தங்கள் பொருள்களுடன் தப்பினர்.
பெர்னாமா
ஸ்பாட் என்ன சொல்கிறது,அந்த பஸ்சுக்கு அதிகாரம் கொடுத்த அதிகாரியை வீட்டுக்கு அனுப்புங்கள.பின் இதுபோன்று நடவாது.நாராயண நாராயண.
39 உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இறைவனுக்கு நன்றி!