மந்திரி புசார் தேர்வில் தலையிடும் அதிகாரம் சுல்தானுக்கு கிடையாது, அசிஸ் பாரி

 

Selangor sultanமந்திரி புசார் யார் என்பதை மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையுடைய கட்சி முடிவு செய்துவிட்ட பின்னர் அதில் தலையிடும் அதிகாரம் சிலாங்கூர் சுல்தானுக்கு கிடையாது என்று அரசமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அசிஸ் பாரி கூறுகிறார்.

சரவாக்கில் அப்துல் தாயிப் மாமுட் இடத்தில் அடினான் சாதெம் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட போதும், அல்லது அப்துல்லா அஹமட் படாவியின் இடத்தில் நஜிப் அப்துல் ரசாக் பிரதமராக நியமிக்கப்பட்ட போதும் இதுதான் நடந்தது என்று அசிஸ் பாரி கூறினார்.

“இது போன்ற நிகழ்ச்சிகளில் அரண்மனையின் பங்களிப்பு சடங்கு மற்றும் விதிமுறைகளைப்Selangor sultan1 பின்பற்றுவது மட்டுமே. மாநில அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள தாமே முடிவு செய்யும் அதிகாரம் என்பது ஒரு திட்டவட்டமான வேட்பாளர் இல்லாதபோது ஏற்படும் சூழ்நிலையைக் குறிப்பிடுகிறது”, என்று தற்போதைய சிலாங்கூர் மந்திரி புசாரின் பதவி குறித்த குழப்பமான நிலை பற்றி கருத்துரைத்த அசிஸ் கூறினார்.

பிகேஆர் அதன் தலைவர் டாக்டர் வான் அசிஸாவை மந்திரி புசார் பதவிக்கு முன்மொழிந்திருப்பதை பக்கத்தான் ரக்யாட்டின் தலைமைத்துவ மன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.

மந்திரி புசார் நியமனத்தில் சுல்தான் சில ஐயத்துக்கு இடமற்ற கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டவர் என்று அப்துல் அசிஸ் பாரி கூறினார்.