அப்துல் காலிட் இப்ராகிம் கட்சிக்குப் பயன்பட மாட்டார் என்று பிகேஆர் நினைக்கிறது. அதனால்தான் அவரை மந்திரி புசார் பதவியிலிருந்து தூக்க முடிவு செய்துள்ளது என பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார்.
“காலிட் பதவி விலகவோ விட்டுக்கொடுக்கவோ விரும்பவில்லை. அன்வார்தான், அவரால் இனி பயனில்லை என நினைத்து அவரை மாற்ற விரும்புகிறார்.
“காலிட்டை வேண்டாம் என்று தூக்கி எறிவதுபோல் இருக்கிறது. எவ்வளவு கேவலமான நிலை காலிட்டுக்கு….சல்லிக்காசுக்குகூட பயன்படாதவராகி விட்டார்”, என இப்ராகிம் ஓர் அறிக்கையில் கூறி இருந்தார்.
கிளந்தானில் 1970-களில் ஏற்ப்பட்டதுபோன்ற நிலை இப்போது சிலாங்கூரில் உருவாகி வருவதாகவும் இப்ராகிம் கூறினார். அப்போது பாஸ் தலைவர் அஸ்ரி மூடா கிளந்தான் மந்திரி புசாரை விலக்க முயன்றார். அதனால் ஒரு அரசியல் நெருக்கடி உருவாகி அங்கு அவசரகாலம் அறிவிக்கப்பட்டது.
“சிலாங்கூரிலும் அப்படி ஒரு நிலை உருவாகலாம் எனக் கவலையாக இருக்கிறது”, என்று மேலும் அவர் தெரிவித்தார்.
ஐயையோ, அப்படி இல்ல பெர்காசா சார், காலிட் சேத்து வச்சிருக்குற காசு மேலதான் இப்ப பலருக்கு கண்ணு. எப்படியாவது இருக்கிறத மாவு இடிச்சிடனும்.
உங்களைப் போல எனக்கும் தான் கவலையாய் இருக்கிறது! கவலையைப் போக்க என்ன செய்யலாம், சொல்லுங்கோ!
இந்த புலம்பலுக்கு எவ்வளவு தட்சணை கொடுத்தார்கள் ? உனக்கு தாங்க முடியவில்லைஎன்றால் என்றால் தூக்கு மாட்டிக்கொள், பதவி நிரந்தமானது அல்லா !நேற்று ஒருவனுடையது இன்று வேறோருவனுடயது நாளை மற்றோருவனுடயது இது நிதர்சனம் !
ஓநாய் ஏன் அழுவிது?
காலித்தை யாரும் தூக்கி எரியவில்லை. எம் பி பதவியிலிருந்துதான் விலக சொல்கிறார்கள். அண்மையில் தெரேங்கானுவில் நடந்ததுபோல.
செல்லாக்காசு என்பது உம்மை பாஸ் பயனற்றவன் என்று தூக்கி வீசியதே!! பக்காத்தான் ஆட்சிக்கேற்ற சிறந்த எம் பி என்றால் யாரும் பதவி விலகச் சொல்ல மாட்டார்கள். டிஎபியும் இதற்கு சம்மதிக்காது. காற்றில்லாமல் புகையாது.. பக்காத்தான் மேலவை தலைவர்கள் ஒருமொத்த முடிவென்றால் நிச்சயமாக அதற்கு தகுந்த காரணமும் உண்டு. பொறுந்திருந்து பாரும்!!!
முதல் தவனை பி.ஆர்,அனுமதியுடன் ஆட்சிசெய்தார் காலிட்,இரண்டாம் தவணைக்கும் மக்கள் தொடர்ந்து அதே காலீட்டே வேண்டும் என்று கேட்டதால் வந்த விலைவு.சிரந்த நிர்வாகி,நமது சேவியரையும் இப்படித்தான் செய்தான் இந்த அன்வர்.இவன் எப்படி பாஸ்ஸில் இருந்து பி.என்னுக்கு வந்து சில காலத்துக்குல் துணைபிரதமர் பதவியை அடைந்தானோ அது போல் காலீட் வந்துவிடுவாரோ என்ற பயம்.அன்வரும் உம்னோவின் குட்டையில் ஊரிய மட்டை தானே,காலீட்டையும் உம்னோ நடையில் பழிவாங்க கிலம்பிவிட்டான் இந்த அன்வர்.ஹாக் ஓராங் மிலாயூவை உடைத்தவர் காலீட்,அந்த வெறியால் காலீட்டுக்கு சாதகம் பேசுவதுபோல் பேசி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தான் பெர்காசா ஓத்தாக் ஊடாங்,செய்துவிட்டான்.இன்னும் ஓயவில்லை,நாராயண நாராயண.
புரிந்தும் புரியாமல் புலம்புகிறார் நல்லது அங்க என்ன நடந்ததோ.
ஊர் ரெண்டு பட்டால் இந்த தவளைக்கு கொண்டாட்டம்..
தவளை கவலை பட்டு இளைத்து விட போகுது எனக்கும் கவலையாக இருக்கிறது .
அந்த தவளைய பிடித்து விரால் மினுக்கு தீனி போடுங்கபா