சிவில் உயர்நீதிமன்றம் மற்றும் ஷரியா நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றங்களும் சம்பந்தப்பட்ட இந்திரா காந்தியின் குழந்தை பிரசன்னா டிக்சா பராமரிப்பு சர்ச்சையில், ஷரியா நீதிமன்றத்தை தடுத்து நிறுத்தும் உத்தரவை பெறுவதற்கு ஈப்போ உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 25) இந்திரா காந்திக்கு அனுமதி வழங்கியது.
“ஷரியா நீதிமன்ற உத்தரவு அமலாக்கப்படுவதை கட்டுப்படுத்த அல்லது தடுப்பதற்கான தடை உத்தரவு பெறுவதற்கு மனு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது”, என்று இந்திரா காந்தியின் வழக்குரைஞரும் ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினருமான மு. குலசேகரன் இன்று விடுத்த ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
2010 ஆம் ஆண்டில், ஈப்போ உயர்நீதிமன்றம் குழந்தை பிரசன்னா டிக்சாவை பாராமரிக்கும் உரிமையை இந்திரா காந்திக்கு வழங்கிற்று. ஆனால், அத்தீர்ப்பு இன்றுவரையில் அமலாக்கப்படவில்லை. இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் நீதிமன்ற உத்தரவுக்கு பணிய மறுத்து வருகிறார், போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்திராவின் முன்னாள் கணவர் முகமட் ரிட்சுவான் அப்துல்லா என்ற கே. பத்மநாதன் தாயாருக்குத் தெரியாமல் குழந்தையை இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்ததோடு அக்குழந்தையை பராமரிப்பதற்கான உத்தரவையும் ஷரியா நீதிமன்றத்திடமிருந்து பெற்றார்.
குழந்தையை பராமரிக்கும் உரிமையை சிவில் உயர்நீதிமன்றம் தாயார் இந்திராவுக்கும், ஷரியா நீதிமன்றம் தகப்பனார் ரிட்சுவானுக்கும் வழங்கியிருப்பதைக் காரணம் காட்டி போலீஸ் நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டது.
இன்று ஈப்போ உயர்நீதிமன்றம் தடை உத்தரவைப் பெறுவதற்கான மனு செய்ய அனுமதி வழங்கியதோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலிட் அபு பாக்காருக்கு எதிராக கடமையை ஆற்றும்படி அவரை கட்டாயப்படுத்தும் மாண்டாமஸ் என்ற தனிச்சிறப்பு உத்தரவைப் பெறவும் அனுமதி வழங்கப்பட்டது.
மாண்டாமஸ் உத்தரவானது இந்திராவின் முன்னாள் கணவரை கைது செய்வதற்கும் குழந்தையை மீட்பதற்கும் நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்திருந்த ஆணையையை அமலாக்க ஐஜிபியை கட்டாயப்படுத்துவதற்கானது என்று குலசேகரன் கூறினார்.
இந்த விவகாரம் பற்றி அவரது சட்ட குழுமம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கும் என்றாரவர்.
“வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு”
இன்று ஈப்போ உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று வர்ணித்த குலா, இது பெரும் விளைவுகளை கொண்டுவரக்கூடியது என்றார்.
“எங்களுக்குத் தெரிந்தவரையில் இந்தத் தீர்ப்பு உலகிலுள்ள நாடுகளில் ஓர் ஐஜிபிக்கு எதிராக எடுக்கப்பட்ட முதலாவது தீர்ப்பாகும். இத்தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதி லீ சியு செங்.
“அவருக்குத் தெரிந்தவரையில் ஷரியா நீதிமன்றம் மற்றும் சிவில் உயர்நீதிமன்றம் ஆகியவற்றிலிருந்து எதிர்மாறான இரு தீர்ப்புகள் இருப்பதால் அவர் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என்பதோடு அவரது கடமையை ஆற்றப்போவதில்லை என்றும் ஐஜிபி அறிவித்திருப்பதால், அது குறித்த முறையான மற்றும் போதுமான சாட்சியங்களை செவிமடுத்த பின்னரே மாண்டாமஸ் உத்தரவு பிறப்பிப்பதா என்பது முடிவு செய்யப்படும்”, என்று நீதிபதி லீ அவரது தீர்ப்பில் கூறினார்.
ஷரியா நீதிமன்றத்திற்கு எதிரான தடை உத்தரவு பற்றிய மனுவுக்கான அனுமதிக்கும் அதே முறைதான் பின்பற்றப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
காலிட் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்
பிரதமர் நஜிப் ரசாக் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் காலிட் அபு பாக்கார் அவரது கடமையை ஆற்றத் தவறியதால் அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் குலா வலியுறுத்தினார்.
“முன்னாள் கணவர் உடனடியாகக் கைது செய்யப்படுவது மற்றும் குழந்தையை அதன் தாயாரிடம் ஒப்படைப்படுவது ஆகியவற்றின் வழி இவ்வழக்கு விரைவாக முடிவுக்கு வருவதை காண நாங்கள் விரும்புகிறோம”, என்றார் குலசேகரன்.
வாழ்த்துக்கள்,வாழ்க நாராயண நாமம்.
நல்ல தீர்ப்பு, ஞாயமான தீர்ப்பு.
நல்லதையே எண்ணுவோம் நல்லதே நடக்க இறைவனை இறைஞ்சுவோம் வழக்காடிய வழக்கறிஞ்சர் குலாவுக்கு நீண்ட ஆயுளை பெற வேண்டுவோம்.
இப்படியும் ஒரு நீதிபதியா? பாராட்டுகள்
ஒரு நாட்டில் இரண்டு விதமான நீதிமன்றங்கள் செயல்பட்டாலே இப்படித்தான் சட்ட சிக்கல்கள் தொடர் கதை போல் தொடரும்.பல இனங்கள் வாழும் ஒரு நாட்டில் சிவில் நீதிமன்றங்களின் தீர்ப்பே அணைத்து இனங்களுக்கும் உரியவை.நமது நாட்டில் அண்மையில் நடந்து கொண்டிருக்கும் மத மாற்று சம்பந்தப்பட்ட வழக்குகளின் நிலவரங்களை பார்க்கும்பொழுது இரண்டுவிதமான நீதிமன்றங்கள் என்பது ஒரே போத்தலில் இரண்டு தேள்களை அடைத்து வைத்ததற்கு ஒப்பாகும்.அதைதான் நடப்பு நிலவரங்கள் காட்டுகின்றன.அரசாங்கமும் பல இனங்களும் ஒன்றாக அமர்ந்து பேசி ஒற்றுமை உணர்வோடு ஒரு துணிவான முடிவை எடுக்க வேண்டும்.
சபாஸ் குலா!, மொத்த மஇகா வை விட , நீர் மேல் …!
SYBAS YB குலா அவர்களே ! அற்புதமான முயற்சிக்கு வாழ்த்துகள்.தான் ஆடா விட்டாலும் தன தசை ஆடும் என்பார்கள். மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் மாசு குறையாத மன்னவன் நீ என போற்றி புகழ வேண்டும்.
சமூதாயதிர்க்கு குரல் கொடுத்து வரும் குலா வுக்கு
பாராட்டுகள் நைனா
கவணம் குலா,இந்த பயலுங்க ஜால்ரா போட்டே ஆலை கவுத்துருவானுங்க,அப்புரம் நீரும் லஞ்ஜம் வாங்கிட்டீர் சொல்லும்.துரோகின்னு சொல்லும்,பூமியை பார்த்து நடங்க.பாஸ்ஸை தவிர எல்லா எதிர் கட்சியும் நஜிப் காலில் விழுந்தாச்சு,வாழ்க நாராயண நாமம்.
செம்ம குத்து! இனி எவனாவது தலைய தூக்கினா அவனுக்கும் குத்து!
வாழ்த்துக்கள் குலா அவர்களே! வாழ்த்துக்கள்!
ஒரு கணவருக்கு இரு மனைவிகள் ஓகே, ஆனா ஒரு மனைவிக்கு இரண்டு கணவர்கள் ? ஒரு நாட்டுக்கு இரண்டு பிரதமர் , ஒரு நாட்டுக்கு இரண்டு நீதித் துறை அதிகாரம் இதுவெலாம் நம்ம நாட்டுல மட்டும்தான்! அதுசரி , நம்நாட்டு ராணுவ கோர்ட் மார்ஷல் நீதிமன்றம் எப்படி ? ஏன் அங்கு ஷாரியா வழக்கு இல்லை ? வாங்க யோசிப்போம் !!
திரு குல உங்கள் சேவைக்கு நன்றி .இதில் வருத்தம் என்னவென்றால் தெலுக் இந்தான் தேர்தலில் நமது சமுதாயத்தினர் சிலர் மாவுக்கு ஓட்டு போட்டு அவரை அமைச்சர் ஆக்கி இந்து அரவறிய பொறுப்பை நமது பிரதமர் அவரிடம் கொடுத்து விட்டர்..அனால் அவரும் ம இ க அமைச்சர்கள் மாறி இது வரை இந்த பிரைச்சனைக்கு வாயை திறக்க வில்லை .
IGP அவர்கள் இன்னும் திருகு தாளம் போடாமல் கடமையை செய்யவேண்டும் ! இல்லை இடத்தை காலி செய்ய வேண்டும் !
தடி எடுத்தவர் “இஞ்சி தின்ற குரங்கு போல “ஆகிட்டாரே!
உள்துறை அமைச்சரை வீட்டுக்கு அனுப்பவேண்டும் இல்லையேல் நிலைமை மாறாது.போலிஸ் சரியாணவனே அரசியல்வாதி தலையீடு மோசமானது.நாராயண நாராயண.
மாவின் இந்து அறவாரியத்தின் நியமனத்தை இப்போது
கேட்டுவிட்டால் அப்புறம் தேர்தல் காலத்தில் பேச ஒன்றும்
இருக்காது என்று குலா நினைத்து இருக்கலாம் ,அல்லது .
ம இ.கா கேட்காத போது நாம் மட்டும் ஏன் கேட்டு பிரச்சனையை கிளப்பவேண்டும் என்றும் குலா சிந்தித்து
அமைதியாக நடவடிக்கையில் இறங்காமல் இருக்கலாம் .நைனா
மேல் முறையீடு செஇவானுங்க்கொ,அங்கே நீதிபதி அவன் ஆள் இருப்பான்,நாட்டாம தீர்ப்பை மாத்தி சொல்லு குரல் வரும்.அல்லாவன் கேஸ்கு என்ன நடந்தது அதுபோல்.நாராயண நாராயண.
ஒரு பழைய பாடல், ‘எல்லாம் நாடக மேடை, இதில் எங்கும் நடிகர் கூட்டம்.’
திரு குல அவர்கள் மானமுள்ள தமிழ் வழக்கறிஞ்சர் .ம இ கவில் உள்ள வழக்கறிஞ்சர்கள்l பணம் சம்பாரிக்கும் மனிதர்கள்.இந்த முட்டாள்கள் கண் முன் தவறு நடத்தலும் உரிமையை தட்டி கேட்க மாட்டார்கள் .
கேட்க மகிழ்ச்சியாக இருந்தாலும், இறுதி தீர்ப்பா என்று தெரியவில்லை. ஒரே வழக்கிர்க்கு வெவ்வேறு நிலை நீதி மன்றங்களில் மாறுபாடான தீர்ப்புகள் வழங்கபடுகின்றன.
பொருத்தமான பாடல்,நானும் இருக்கிறேன்,ஏதோ செய்துகொண்டிருக்கேன்.இவ்லோ பிரச்சனை பினாங்கில் ஆனா எனக்கு பேராவில் ஒதுக்கிய நிலம் தான் கண்ணுக்கு தெரியிது.பினாங்கில் தமிழ் இடைநிலைபள்ளி நாடகம் என்னவாச்சு.அன்வார் எல்லா இனத்துக்கும் சமமா நாக்காலி கொடுப்பதாக ஆசை காட்டுவான் ஜெயித்ததும் சுல்தான் முடியாது சொல்லிட்டார்ன்னு கதை விடுவான்.பினாங்கில் தமிழ் இடநிலை பள்ளிக்கு முதல்வர் நிலம் கொடுத்துவிட்டார்,பணம் கொடுக்க கட்டிக்கொடுக்க தயார் ஆனால் கமலநாதன்,பி.என் அரசு ஒப்புதல் தர மறுக்கிறது,என்ன கொடுமை சார் இது,நம்மலை என்ன நினைச்சிட்டு இருக்கான் பி.ஆரில்.கேவலமான அரசியல்.செந்தில் ஒரு சினிமாவில் சொல்வார்,அங்கே தெரியும் பெரிய மலையை என்னால் கொண்டுபோய் வேறிடத்தில் வைக்கமுடியும் சரி கொண்டுபோய் வை என்றவுடன்,நான் தயார் யாராவது அந்த மலையை தூக்கி என் கைமேல் வையுங்கள் என்பார்,அதுபோலவே நாராயண நாராயண.
காயி, பினாங்கு தமிழ் இடைநிலப்பள்ளி கட்டுவதற்கான அடுத்த நடவடிக்கையாக என்ன செய்யலாமென்று சொல்லுங்கள். “மஞ்சள் காமாலைக்காரனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகவே தெரிவது போல” இருக்கக்கூடாது அல்லவா!!!!
திரு குல்லா சார், பல போராட்ட்டங்கள் வரும். மேல் முறையீடும் தொடரும். ஏன் தேச நிந்தனை சட்டம்கூட பாயலாம். நடப்பதை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். உரிமைக்கு குரல் கொடுக்கும் உங்களுக்கு மக்களுடன் இறைவனும் துணை கொள்வானாக!!!!
தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது என்று கூரும் இஸ்லாம் ஒரு தாயிடம் இருந்து பிள்ளையை பிரித்து வேடிக்கை காட்டுவது எந்த வகையில் நியாயம் . இது தான் அவர்கள் matham சொல்லும் மார்கமா ?? ஒரு தாய் தன் பிள்ளையை பிரியும் வேதனை தந்தைக்கு புரிய போவதில்லை . அதிலும் குடும்பம் தேவையில்லை என்று மதம் மாறுபவனுக்கு பிள்ளை மட்டும் எதற்கு ?? இவனை போன்ற ஆண்கள் இருப்பதாலே நல்ல படித்த அழகான பெண்களுக்கு குடா திருமணத்தின் மிது வெறுப்பு வருகிறது ,
சிரு எரும்பாரே,நடப்பதை விடுத்து நடவாததை சொல்லி ஏய்ககூடாது.சிலாங்கூரில் முன்பு துணை மந்திரி பெசார் பதவி தமிழர்க்கு கொடுப்பதாக சொல்லியும்/பின் எல்லோறுக்கும் சம நாட்காலி தருவதாக ஆசைவார்தை கூறி ஏய்தது பி.ஆர்.கேட்டால் சுல்தான் மறுத்துவிட்டதாக சொல்கிறான்.அது போலவே தமிழ் இடை நிலைபள்ளியும்.சரி,ஹின்ராப்பிடம் காண்பியுங்கல் முதலமைச்சர் சொன்னதை ஹின்ராப் நம்பினால் நாம் நம்புவோம்.அரசியல் வாதி சொல்வதை நம்ப தயார் இல்லை.இதற்கு தான் அன்வார் அவமதித்தான் ஹின்ராப்பை,அரசியலை நன்கு கலக்குவார் பொன் ரங்கன்,அவரும் விசயம் தெரிந்தவரே,தேனீ,மோகன் போன்றோரும்,வாழ்க நாராயண நாமம்.
ஏன் மதம் மாறுகின்றனர்,என்னதேவை வந்தது,கற்பனை செய்து பார்ப்போம்,ஒரு குடும்பம் ஐந்து பிள்ளைகல் ஒரு தாய் ஒரு தந்தை,குறைந்தது பத்து வருட குடும்பவாழ்கை,ஒரு கால் இஸ்லாம் பெண்ணை காதலித்திருப்பாரோ அல்லது திருமணம் செய்துக்கொண்டாரோ.ஏன் மதம் மாறிணார்.பிள்ளைகள் மீது ஏன் பொருப்பு இல்லாது போனது,எதனால் கடமை தவரினார்.மனைவிக்கு எப்படி தெரியாது போனது,இரண்டு தரப்பில் உறவுகள் எங்கே போனார்கள்,நன்பர்கள்,மற்றும்2.மனைவி மீது ஏதும் புகார் உண்டா,மனைவி பற்றி சுற்றத்தார் கருத்து என்னவோ.கணவன் பற்றிய பயோடாத்தா எப்படி,இருவருக்குல் ஏதோ நடந்திருக்கு என்பது உண்மை.இன்றின் வாழ்கை இப்படி தான் முடிகிறது.குடும்பத்தோடு மாமனார்,மாமியார் சொந்த பந்தத்தோடு அனுசரித்து வாழ்பவர்க்கு இன்னல் வருவது அரிது.மகள் தன் கணவனை தனியே அழைத்து சென்று குடும்பம் நடத்தினால் கெட்டிக்காரி அதுவே தன் மகனை வந்தவல் அழைத்து சென்றால் கொடுமைகாரி.ஆண் மகனை எப்படி வலர்பது,பெண் பிள்ளையை எப்படி வலர்பது யென்று முன்னோர் மிகவும் கவணமாக இருந்தர் இப்போது அதுவெல்லாம் மூட நம்பிக்கையாகிவிட்டது*.சென்டீரி பிக்கின் சென்டீரி தங்கோங்.*நாராயண நாராயண.
ஹின்ராப் நம்பினால் நாம் நம்புவோம்.ஆமா, ரொம்பதான். நம்பி…நம்பி..அடி வாங்கி ஒடுனதுதான் மிச்சம்.