இஸ்லாம் குறித்த பினாங்கு தகராற்றில் முன்னாள் தலைமை நீதிபதியை ஆதரிக்கிறார் இப்ராகிம் அலி

 

Ibrahim Ali-ex-judgeபினாங்கில் இஸ்லாம் மருட்டலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட் சாற்றியிருந்த குற்றச்சாட்டுக்கு பினங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் பதிலளித்த முறை அவருடைய தகுதிக்கு ஏற்றதல்ல என்று பெர்காசா கூறுகிறது.

அப்துல் ஹமிட் பெயர் கூறப்படாத ஒரு முன்னாள் முப்தி கூறியிருந்ததை வெளியிட்டதற்காக அப்துல் ஹமிட்டை “இனவாதி மற்றும் ஒரு பொய்யர்” என்று கூறுவது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது என்று பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி தெரிவித்தார்.

அவர் அவ்வாறு திருப்பியடித்திருக்க வேண்டியதில்லை. ஒரு முதலமைச்சர் என்ற முறையில் அவர் சாட்சியங்களை கொடுத்திருக்க வேண்டும். 2008 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இஸ்லாமிய நடவடிக்கைகளுக்கு எவ்வளவு நிதி அவர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். எங்களுக்குத் தெரிய வேண்டும் என்றாரவர்.

“சிஎம் என்ற முறையில் அவர் ஹமிட்டுக்கு பதில் அளிக்க வேண்டும். குதித்து சத்தம் போட வேண்டிய அவசியமில்லை. அவர் ஒரு தெருச் சண்டைகாரர் போல் நடந்து கொள்கிறார்”, என்றார் இப்ராகிம்.

“உரிமைப்படி, இஸ்லாமிய நடவடிக்கைகள் அதிகமான நிதியைப் பெற வேண்டும், ஏனென்றால் அது பெடரேசனின் மதம்”, என்று இப்ராகிம் கூறிக்கொண்டார்.

சமீபத்தில் பினாங்கில் அம்மாநில துனை முதலமைச்சர் பி. இராமசாமி பங்கேற்றிருந்த ஒர் நிகழ்ச்சியில் பல்சமய பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. அந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஜி. பழனிவேலும் பங்கேற்றிருந்தார். அது குறித்து விளக்கம் அளித்திருந்த இராமசாமி, பினாங்கு இந்தியர் சங்கத்தில் பல சமயத்தினர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள், இஸ்லாமியர்கள் உட்பட என்றார்.

“நிச்சயமாக, நாம் சமய சுதந்திரத்தை பின்பற்றுகிறோம். ஆனால் இதர சமயங்கள் அவற்றின் பிரார்த்தனைகளை அப்புறம்தான் நடத்த வேண்டும், முஸ்லிம் பிரார்த்தனை நடத்தபடும் அதே நேரத்தில் அல்ல”, என்று அலி குறிப்பிட்டார்.

“அரசமைப்புச் சட்டத்தின் மதம் இஸ்லாம். எங்களை மற்ற சமயங்களுக்கு சமமான நிலையில் வைக்க விரும்புவதன் மூலம் சில தரப்பினர் எங்களுக்கு சவால்விட விரும்புவது போல் தெரிகிறது”, என்றாரவர்.

“இந்நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினர். இஸ்லாத்தை மற்றவைகளுடன் சமநிலையில் வைப்பது அச்சமயத்தை சிறுமைப்படுத்துவதாகும்”, என்றார் இப்ராகிம் அலி.