இனவாத எதிர்ப்பு அரச சார்பற்ற நெகாரா-கு என்ற புதிய அமைப்பை தமது அமைச்சு அதன் தற்போதைய பெயரில் பதிவு செய்யாது என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று அறிவித்தார்.
அம்பிகா மற்றும் சாமாட் சாயிட் ஆகியோரால் வழிநடத்தப்படும் இந்த இயக்கம் பதிவு செய்யப்படுவதற்கு சங்கப் பதிவாளரிடம் இன்னும் மனு செய்யவில்லை.
“அப்படி பதிவு செய்வதற்கு அது சங்கப் பதிவு அதிகாரியிடம் (ரோஸ்) மனு செய்தாலும், நெகாரா-கு என்ற பெயர் பொருத்தமானதாக இல்லை, ஏனென்றால் அது மலேசியாவுக்கு சொந்தமானதாகும்.
“நெகாரா-கு என்பது நெகாராகு என்ற கீதத்தைக் குறிப்பிடுகிறது. அது தேசிய கீதம் சட்டம் 1968 செக்சன் 2 இன் கீழ் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
“அது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தலாம். சங்கங்கள் சட்டம் 1966 செக்சன் 7(3)(d)(i) மற்றும் (iii) இன்கீழ் அது பதிவு செய்யப்படக்கூடாது”, என்று இன்று ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.
அப்படியென்றால் இனக்கலவரங்களை தூண்டிவிடும் perkasa யாருக்கு சொந்தம் ?
மோட்டிவ் ஓவ் ஸ்டோரி.இந்த காலத்தில் சாசனம் போன்ற காரியத்தை தவிர்ப்பது நன்று.அரண்மனை,போலீஸ்,நீதி துரை,ரௌடிசம் எல்லாம் ஆட்சியாலர் கையில்.நீதி மன்ற தீர்ப்பே செல்லா காசாகிவிட்டது.சூழ் நிலை சரியாகும் வரை பொருமை காப்பது நன்று.ஒரு ரௌடி கும்பல் டேமோ செய்பவரை தாக்கும் போது ஒரு கர்பிணி பெண் போலீஸ் ஸ்டேஷன் உள்ளே ஓடுகிறால், போலீஸ் அவலை வெளியே விரட்டுகிறது வுள்ளே வரவிடாது.இன்னும் நிறைய சம்பவங்கள் நடக்குது.நாராயன நாராயண.
Negara Kita , அல்லது Negara Kami என மாற்றிவிட்டால் என்ன?
வேண்டுமென்றால் வேரிலும் காய்க்கும். வேண்டாத மருமகள் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம். என்ன செய்வது, அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயாய்த்தானே !!!! இதில் உள்துறையமைச்சர் என்ன விதிவிலக்கா???
உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி அவர்களே… ரொம்ப நல்ல முடிவு இது. இஸ்மா மற்றும் பெர்காசா போன்ற இனவெறி மதவெறி பிடித்த அமைப்புக்களை அங்கீகரிக்கும் நாம் நல்லது செய்வோரை அங்கீகரிக்கலாமா? கூகூகூகூ டாதே..
மர] மண்டயனுக்கு [negara ku ] என் நாடு என்றால்என்ன என்று தெரியாமல் பயத்தில் உளறுகிறான்.பங்களாதேஷ் ,இந்தோனேசியா காரன்களா இந்த இயக்கத்தை ஆரம்பிக்கிறான் .ஒரு வேலை OK சொல்லியிருப்பான் .
சங்கப் பதிவிலாகா துறை சுதந்திரமாக செயப்பட வேண்டும்.அதில் ஓர் இயக்கம் பதிவு செய்வதற்கு முன் உள் துறை அமைச்சன் அதனை தடை செய்ய மிரட்டுவது அவனது அறியாமையைத்தான் காட்டுகிறது.தன் நிழலைக் கண்டு தானே அஞ்சுகின்றான் இந்த இந்த இனவாதப் பேர்வழி.இது அதிகார துஸ்பிரவேகத்தை காட்டுகிறது.