பாஸ் கட்சியின் ஆன்மீக தலைவர் தோக் குரு நிக் அசிஸ் நிக் மாட் அவரது கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமுக்கு தெரிவித்திருந்த ஆதரவுக்கு மிகுந்த கவனமுடன் தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
ரமதான் மற்றும் நோன்பு ஆகிய ஆன்மீக நடைமுறைகளில் கவனம் செலுத்துவதை தாம் விரும்புவதாகவும், ஆனால் சிலாங்கூர் மந்திரி புசார் பிரச்சனை குறித்த தமது நிலைப்பாடு என்ன என்ற முடிவற்ற கேள்விகளுக்கு” பதில் கூற வேண்டிய கட்டாயத்திற்கு தாம் தள்ளப்பட்டிருப்பதாக தோக் குரு கூறினார்.
சிலாங்கூர் மந்திரி புசார் காலிட்டை பாஸ் கட்சியின் தலைவர் அவரது அறிக்கையில் தற்காத்திருப்பது பற்றி ஊடகங்கள் தம்மிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதாக அவர் கூறினார்.
“நான் தலைவரின் அறிக்கையை படித்திருக்கிறேன். நான் அவரை முழுமையாக ஆதரிக்கிறேன்.
“நான், நாட்டிலுள்ள பலரைப் போல், காலிட் என்ன தவறு செய்து விட்டார் அதற்காக அவரை மந்திரி புசார் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று கேட்கிறேன்?”, என்று நிக் அசிஸ் வினவினார்.
‘கேப்டன் தவறு செய்திருக்கலாம், ஆனால்’
காலிட் அவரது முதல் தவணையில் மிகச் சிறப்பாக சேவையாற்றியுள்ளார். அதன் விளைவாக சிலாங்கூரின் தனிச்சிறப்பு உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
அவர் அப்படியே மறுக்க முடியாத தவறுகளைச் செய்திருந்தாலும், அதற்காக அவரை மாற்ற வேண்டும் என்பது தகைமையற்றதாகும் என்றாரவர்.
அவசரப்பட்டு ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு பக்கத்தான் தலைமைத்துவம் இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை நிக் அசிஸ் வலியுறுத்தினார்.
கப்பலின் கேப்டன் சில சமயங்களில் தவறு செய்திருக்கலாம். அதற்காக கப்பலின் சிப்பந்திகளே கேப்டனாவதற்கு அவசரப்படக்கூடாது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
“தமது அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு ஹாடி போதுமான தகவல்களைப் பெற்றிருப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது”, என்று கூறிய தோக் குரு அசிஸ், இப்போதைக்கு பாஸ் அதன் தலைவரின் அறிக்கைக்கு ஆதரவு அளிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது போதுமானதாகும் என்று அவர் மேலும் கூறினார்.
“கேப்டன்கள் தவறு செய்வது உண்மையாக இருக்கலாம். ஆனால், அனைத்து சிப்பந்திகளும் கேப்டனாக வேண்டுமென்றால் கப்பல் நிச்சயமாக தடங்கலின்றி பயணிக்க முடியாது”, என்பதை ஆன்மீக தலைவர் அசிஸ் வலியுறுத்தினார்.
அன்வாருக்கு தொரோகம் நினைக்க இவரும் கிளம்பிட்டார் ! இனி PKR நாசமாக போக போகுது ! வாழ்வோ சாவோ BN னுக்கே ஒட்டு போடுங்கள்
மாலுமி, அரசியல் கப்பலை கவனமாக செலுத்தவேண்டும். சிறு துளை விழுந்தாலும் ஆபத்தானது. மென்மேலும் இது அரசியல் கப்பலல்லவா?? பல அரசியல் இன்னல்களுக்குகிடையில் கப்பலை கவனமுடன் செலுத்தவேண்டும். இல்லையேல், கப்பல் மூழ்க நேரிடும். மூழ்க விடுவதா அல்ல மீள்வதா என்பதே இப்போதைய நிலை.!!! அறிவுக் கொழுந்து
(சார் சரியானால் மக்கள் பக்கம் தலைப்பு செய்திக்கு கொடுங்கள்.)
அரசியலில் அரசு ஆணவம் கூடாது?
அன்வார் PKR Ketua Umumaa அல்லது PK ketua Umumaa என்று யாரவது பதில் சொல்லுங்கள்? எது எப்படி இருந்தாலும் PKR தலைமை ஆலோசகர் PR உயர் மத்திய செயலவைக்கு தம் பிரேர்தனையயை கொண்டு செல்லாமல் PKR MB யை மாற்ற செய்த விதம் ,அறிவித்த விதம் திமிரான போக்குதான்.
இதனால் PKR அன்வாரின் அரசியல் திறமைக்கும் PKR தலைவி அசிசாவுக்கும் “தகுதி இழுக்கு” உருவாகி உள்ளது மன்னிக்க முடியாத குற்றம் ,கேவலம்.
இப்போது பாஸ் ஆதரிக்க வில்லை. காரணம் MB எந்த தவறும் செய்ய வில்லை என்கிறது.
PKR ன் தேசிய உதவி தலைவருக்கு போட்டி இட்ட காலீட்/ அஸ்மின் /நுசுதின் ஆகியோரின் சிலாங்கூர் மாநில முடிவான ஒட்டு நிலைபாட்டை தெரிந்து காரணம் காட்டியிருந்தால் ஒரு வேலை ஓகே !
PKR இன் முன்னாள் பொது செயலர் நுசுதின் சுமார் 7000 ஓட்டுகளை ஓட்டை போட்டு விட்டு கொளப்பி படிக்க லண்டன் போயி விட்டார். இல்லாவிட்டால் காலீட் வென்று இருப்பார்.
இன்று சிலாங்கூர் மாநில அளவில் PKR இன் துணை தலைவருக்கு போட்டி இட்ட காலீடின் சிலாங்கூர் மாநில ரீதியில் கிடைத்த ஒட்டு என்ன என்று மக்கள் கேற்பதில் நியாயம் உண்டு.
சாபங்கில் விளக்கு அணைத்து எண்ணப்பட்ட கேஸ் நிறுவையில் உள்ளது இன்னும் மூன்று சாபங் முடிவுகள் தெரியவில்லை.அம்பாங் போட்டி நீதிமன்றம் ஏறி உள்ளது இதற்கிடையில் MB யை மாற்ற என்ன துடிப்பு ? அறிவு எங்கு போச்சி?
மிகவும் நீதி தழுவாதா வான் தலைவி இந்த அத்தான் விசியத்தில் MB விசியத்தில் இப்போதே கோளாறாய் போய் விட்டார். மாநிலம் என்ன ஆகும் . அரசியலில் ஆணவம் கூடாது அதே வேலை புருஷன் பொண்ட்டாட்டி மாநில அரசியல் அரசு கூடவே கூடாது என்பது அசிசவுக்கும் அன்வாருக்கும் விளங்க வில்லை?
மாநில மக்களும் ,நாட்டு மக்களும் அவ்வளவுக்கு இளிச்சான் வாய்கள?
மலேசியா உலக வளையத்தில் வளரும் நாடு 2020 பாட்டியலை தொட இன்னும் 6 ஆண்டுகள் தாம் உள்ளது .1000 ஆண்டுகள் பின்னோக்கி பரமேஸ்வரன் காலம் பரமேஸ்வரி சாம்ராஜ குடும்ப அரசியலுக்கு PKR கொண்டு போவது மிக பலவீனமான “அரராஜாங்கம்”.என்பேன்.
பாசின் முடிவு நீதியானது, நியாமானது. அல்லாவுக்கு பயந்து மனிதம் அரசியலையும் அரசையும் காப்பாற்ற வேண்டும். தனி மனித வேட்டைக்கும் மக்களை குழப்பாமல் எடுத்து இருக்கும் முடிவு வரவேற்கதக்கது.
DAP இந்த முக்கிய விசியத்தில் ஆராயாமல் ஏனோ தானோ முடிவு கட்சியில் தரத்தை தாழ்த்தி உள்ளது. படிப்பாளிகள் ,பாட்டதாரிகள் இருக்கும் DAP கட்சியின் பதிவும் சட்ட சிக்கலும் தீரும் வரை அரசியல் வியூகங்கள் செய்வதை நிறுத்தி PR கு புத்துயிர் தர யோசிக்க வேண்டும்.
தெலுக் இந்தான் தேர்தல் முடிவுக்கு DAP யின் தோல்விக்கு எது காரணம் என்பதை விட்டு விட்டு யார் காரணம் என்று தீர்வை கண்டால் அடுத்த பொது தேர்தலும் அல்லது இடைத்தேர்தல்களும் சாதக விளைவைத்தரும் !
PKR இல் இன்று மக்கள் நலம் பேணி நல்ல முடிவை செய்ய யாருமே இல்லை என்பதால் MB விசியத்தை விட்டு விட்டு கட்சியை பலப்படுத்த புதிய தலைவர்கள் தயாராவது காலத்தின் கட்டளையாகக்கொள்வோம்.
குறிப்பா PKR கட்சி தேர்தலால் கஞ்சியாய் கருவாடாய் இருக்கும் நட்புகள் மீண்டும் உயிர் பெற வேண்டும் . பதவி வரும்போது பணிவு வர வேண்டும். பதவி இல்லாதவர்கள் கடமையை செய்து தமிழர் இன உரிமை காக்க போராடுவோம்.
குறித்துக் கொள்ளுங்கள். கூடிய விரைவில் பக்காத்தானை விட்டு பாஸ் கட்சி வெளியேறும், அல்லது வெளியேற்றப்படும்.
சிலாங்கூர் மாநில சபையில் முடிவு செய்யாமல்,காலித் சொந்த விருப்பங்களில் அம்நோவிற்கு சாதகமான குத்தகைகளை அனுமதிக்க முடிவெடுத்துள்ளதாக ,அதில் தண்ணீர் குத்தகையும் அடங்கும் என்பதாக தெரியவந்துள்ளது.அம்நோவிடம் அணுக்கமாக பழகி வருவதாகவும்,பக்காதான் கட்சிகளில் மற்ற மாநிலங்களிலும் சிலர் மனமுடைந்து போனதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி…….. நாம் யாரைத்தான் குரைக்கூருவது ?
சேராத இடம் சேர்ந்து தன் மூப்பாக செயல்படுவது ஏன்? யார் தூண்டுதலில் இவரின் இந்த ஆட்டம் கட்சின் தலை இருக்க வால்ஆகலாமா ?????????????
ஹுடுட் எண்ணம் கொண்ட பாஸ் எனும் குறுகிய மனப்பான்மையடைய கட்சியுடன் மற்ற எவரும் இணைந்து பணியாற்றுவது சிரமம் தான். முன்பு கிளந்தானில் அம்னோவுக்கு அறிவு வந்தது. இப்போது ஜ.செ.க வுக்கும் அன்வாருக்கும் புத்தி வந்திருக்கிறது. சிலாங்கூர் முதல்வர் காலிட் போலவே பல சந்தர்ப்பங்களில் அம்னோவின் ‘பெருந்தலைவர்களுடன் பாஸ் கட்சியும் கட்டித் தழுவிப் பேசியதும், அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூரை அம்னோவுக்குத் தாரைவார்க்க ரகசிய ஒப்பந்தப் பேச்சுவார்த்த நடந்ததும் பலருக்கும் தெரியும் ஆனால் அடுத்த பொதுத்தேர்தல் வரை ‘பொறுமை’ காக்க முடியாத அந்த ‘ந’ல்லவன் விரைவில் சிலாங்கூர் ஆட்சியை கலைத்து அவசரத் தேர்தலுக்கு முடிவு செய்து விட்டான். அதனால் தான் இந்த ‘காலிட்’ பாஸ் குழறுபடிகள் எல்லாம். மாற்றரசு தோற்றாலும் சரி இனி என் ஓட்டு _____னுக்கு இல்லை. இல்லை. இல்லவே இல்ல்ல்ல்ல்லை.
கடந்த பொதுத்தேர்தலில் கோலா செலாங்கூர் பாராளுமன்ற சீட்டை எப்படி பி கே ஆர் கோட்டைவிட்டது ! இதற்கு யார் காரணம் ……கொஞ்சம் சிந்திக்கவும் …பதில் பளிச்சிடும் !
சிறந்த விளக்கம்,இன்னும் மோகன்,தேனீ கோமென்ட் செய்யவில்லை,ஒரு சார்பாக பேசாது நடுநிலை கருத்தே.வாழ்க நாராயண நாமம்.