பக்கத்தான் கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் பாஸ் கட்சி கூட்டணியின் ஒன்றுபட்ட கொள்கை நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செல்வது பற்றி அவரது கருத்தை இன்று வெளியிட்டார்.
ஹரிராயா கொண்டாட்டங்கள் முடிவுற்ற பின்னர், மலேசியாவில் இரு கட்சி அமைவுமுறை தொடருமா என்பதுதான் மிகப் பெரிய பிரச்சனை என்று அவர் கூறுகிறார்.
கூட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தை அக்கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்று மதிக்க மறுப்பது பக்கத்தான் ரக்யாட் சிதறிப் போவதற்கு வழிவகுக்கும் என்று அவர் இன்று வெளியிட்ட ஹரியா செய்தில் கூறுகிறார்.
“பக்கத்தான் இல்லாவிட்டால், மலேசியா கட்டுப்பாடற்ற அதிகாரத்திற்கான ஏகபோக உரிமை நிலவிய காலத்திற்கு மீண்டும் திரும்பும்”, என்று குவான் எங் அச்சம் தெரிவித்தார்.
குவான் எங் இரு விவகாரங்களைக் குறிப்பிடுகிறார். சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மந்திரி புசாரை அகற்றுவதற்கு எவ்வித காரணமும் இல்லை என்று இப்போது கூறுவது ஒன்று.
சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம்மை மாற்றி அவரிடத்தில் பிகேஆர் தலைவர் வான் அசிஸா வான் இஸ்மாயிலை நியமிக்க பக்கத்தான் தலைவர்கள் மன்றம் ஏற்றுக்கொண்டு விட்டது.
ஜூலை 23 இல் நடைபெற்ற அக்கூட்டத்தில் பாஸ் தரப்பில் துணைத் தலைவர் முகம்மட் சாபு, உதவித் தலைவர்கள் துவான் இப்ராகிம் துவான் மான் மற்றும் ஹுசாம் மூசா, தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி, இளைஞர் பிரிவு தலைவர் சுஹய்ஸான் காயாட் மற்றும் மத்திய குழு உறுப்பினர் ஹாட்டா ரமலி ஆகிய அறுவர் பங்கேற்றிருந்தனர்.
மேலும், அக்கூட்டத்தில் சிலாங்கூர் மந்திரி புசார் நியமனம் பிகேஆரின் தனிச்சிறப்புரிமை என்ற கோட்பாட்டை பாஸ்சும் டிஎபியும் மறுஉறுதிப்படுத்தின.
இரண்டாவது விவகாரம் பக்கத்தான் கோட்பாடுகளுக்கு எதிர்மாறாக பாஸ் ஹூடுட் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியதாகும்.
KEADILAN , டிஎபி இரு கட்சிஹகளும் சட்டமன்ற உறுப்பினர்களை கன்ன்கானினிக வேண்டிய நேரம் இது, பாஸ் கட்சி பரிசனுடன் சேரக்கூடும் அதே வேலையில் தவளைகளுக்கு வலை விசப்படலம்.
ஜாக்கிரதை. மீண்டும் பெராக் சம்பவம் நடைபெறலாம்.
பக்கதானில் பாஸ் ஒரு “காலை சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது ‘
தேர்தல் சமயத்தில் முஸ்லீம் அல்லாத மக்களின் ஆதரவைப் பெற ஒரு நாடகமும் தேர்தல் முடிந்தவுடன் இன்னொரு நாடகமும் ஆடும் சமயவாத கட்சிளின் நிலை இப்படிதான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்பதனை நிரூபிக்கின்றது பாஸ் கட்சியின் பொது தேர்தலுக்குப் பிந்திய நடவடிக்கைகள். முஸ்லீம் அல்லாத மக்களுக்கு பாஸ் கட்சியின் மீதுள்ள நம்பிக்கை வெகுவாக குறைந்து வருவதை அவர்கள் உணரவில்லை என்றால் 14-வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி கிளந்தானை அம்னோவுக்கு தாரைவார்த்து விட்டு இதர வெற்றி கொண்ட தொகுதிகளிலும் மகாத்தான தோல்வி அடையும். அம்னோவின் முதல் கட்ட திட்டம் வெற்றிப் பெறப் போவதை மக்கள் கூட்டணி உறுதி செய்துள்ளது.