அம்னோவுடன் இணைந்து சிலாங்கூரை முஸ்லிம்-அல்லாதவர்களிடமிருந்து கைப்பற்ற பாஸ் சூழ்ச்சி!

 

PAS leak1வாட்ஸ்அப் வழியாக பாஸ் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் பக்கத்தானிலிருந்து பாஸ் விலகிக் கொள்வது பற்றிய சாத்தியக்கூறுகளை விவாதித்தது கவனக்குறைவின் காரணமாக அம்பலத்திற்கு வந்துள்ளது.

பக்கத்தான் சிதறப்போவது என்பதில் உண்மை இருக்கிறது என்பதற்கு இது ஒரு மிகப் பெரிய தகவல். அம்னோவுடன் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்தவர் மத்தியக்குழு உறுப்பினர் முகமட் ஸூடி மார்ஸூகி.

ஒரு விரிவுரையாளரான ஸூடி எப்படி பாஸ் பக்கத்தானிலிருந்து விலகி பின்னர் அம்னோவின் உதவியுடன், அதே வேளையில் காலிட் இப்ராகிம்மை மந்திரி புசாராக வைத்துக் கொண்டு, ஒரு சாதாரணப் பெரும்பான்மையைக் கொண்ட சிலாங்கூர் அரசை அமைப்பது பற்றி அக்காட்சியில் விளக்கம் அளிக்கிறார்.

இந்த உரையாடல் பாஸ் மத்தியக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்ற ஒரு வாட்ஸ்அப் குழுவினரின் கூட்டத்தில் நடைபெற்றது.

தங்களுடைய பெயரை வெளியிட விரும்பாத பாஸ் உறுப்பினர்கள் அந்தவாட்ஸ்அப் திரைக்காட்சி உண்மையானது என்று மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினர்.

இன்று பின்னேரத்தில் ஒரு முகநூல் இடுகையில் ஸூடி அச்செய்தியை மறுக்கவில்லை. மாறாக அவர் பக்கத்தானிலிருந்து விலகுவதற்காக PAS leak2நோக்கத்தைக்கொண்ட அக்குழுவில் தாம் ஓர் உறுப்பினர் அல்ல என்று கூறியுள்ளார். தம்மைக் கேட்டுக்கொண்டதால் அவ்வாறான ஒரு சாத்தியமான கூறுகளை தாம் கற்பனை செய்தாக அவர் மேலும் கூறினார்.

ஸூடி பாஸ் ஆய்வு மையத்தின் செயல்முறைகள் இயக்குநர் (பிபிபி) ஆவார்.

பாஸ் கட்சிக்குள் கொள்கைப் பிணக்கு

பத்துக்கும் குறையாத பாஸ் மத்தியக்குழு உறுப்பினர்கள், அவர்களில் சிலர் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம்மின் வலுவான நண்பர்கள், பக்கத்தான் விலக வேண்டும் என்ற “முன்மொழிதலை தீவிரமாக ஆதரித்தனர்” என்று ஸூடி ஒப்புக்கொண்டுள்ளது பக்கத்தான் தலைவர்களுக்கு ஆட்டத்தைக் கொடுக்கும்.

PAS leak3இதனிடையே, கசியவிடப்பட்டுள்ள வாட்ஸ்அப் உரையாடல் பாஸ் கட்சிக்குள்ளே பெரும் பிணக்கை ஏற்படுத்தியுள்ளது.

அம்னோவுடன் ஒத்துழைக்கும் திட்டத்தை ஸூடி கூறிய போது, கோல கிராய் நாடாளுமன்ற உறுப்பினர் ஹட்டா ரமலி உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார்.

“அம்னோவுடன் கூட்டாக செயல்படுவதா? நான் மாட்டேன்”, என்று உடனடியாகப் பதில் அளித்தார்.

பாஸ்சின் இனவாத முகம்?

அந்த வாட்ஸ்அப் உரையாடலில் கவலையளிக்கும் பகுதி அதன் அப்பட்டமான இனவாத அரசியலாகும். இதில் ஸூடி அளித்த திட்ட விளக்கத்தின்படி அரசியல் ஆதிக்கம் மீண்டும் மலாய்க்காரர்கள் கைக்கு வருவதாடு அவர்கள் “டிஎபியையும் முஸ்லிம் அல்லாதவர்களையும்” ஒன்றுமற்றவர்களாக்கி விடலாம் என்பதாகும்.

“அதற்குப் பின்னர், டிஎபியும் முஸ்லிம்கள் அல்லாதவர்களும் அல்லா பிரச்சனை மற்றும் அதிரடி தாக்குதல் ஆகியவை பற்றி சத்தம் போட்டால், நாம் அவர்களை நையப்புடைத்து விடலாம்”, என்றாரவர்.

 

“மலாய்-முஸ்லிம் அரசியல் அதிகாரம் மீண்டும் நிகழ இந்த ஆண்டின் இறுதியில் எல்லையை மாற்றிவிடலாம்”, என்று அவர் எழுதினார். அதற்கு அக்கூட்டதினரிடமிருந்து எவ்வித எதிர்ப்பும் எழவில்லை.