சிலாங்கூர் மந்திரி புசார் நெருக்கடியின் காரணமாக பக்காத்தான் ரக்யாட் உடையும் சாத்தியம் இருப்பதாக பாலேக் பூலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹில்மி யஹ்யா கூறியுள்ளார்.
பாஸ் கட்சியில் பலர் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதையும் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். பாஸ் தலைவர்களிடையேயும் அவ்விவகாரம் தொடர்பில் கருத்துவேறுபாடு நிலவுகிறது.
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், காலிட்டை ஆதரிக்கும் வேளையில் துணைத் தலைவர் மாட் சாபு-வும் தகவல் பிரிவுத் தலைவர் மாபுஸ் ஒமாரும் மந்திரி புசாரை மாற்றும் முடிவுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
“எனவே, பிளவுபடும் வாய்ப்பு உள்ளது. அரசியலில் சாத்தியமற்றது என்று எதுவும் இல்லை. எதுவும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்”, எனச் சுகாதார துணை அமைச்சருமான ஹில்மி கூறினார்.
பாவம் பாஸ்காரர்கள், எப்படி உடைப்பது என்று கைவந்த கலை.
ஹின்ராப்பை அன்வார் உடைத்தான்,பி.ஆரை உம்னோ உடைத்தான்.ஆனால் உம்னோவை யாரும் அசைக்க முடியவில்லை.சிலாங்கூரில் நெருங்கிவிட்டான் உம்னோ,ஹிந்து ஆதரவே ஜெய்க வைத்தது அதுவும் ஜூல் கிப்லி மீது ஏற்பட்ட வெறுப்பே முதல் காரணம்.மலாய்காரன் ஆதரவு பெருகிவிட்டது உம்னோவுக்கு.அடுத்த தேர்தலில் சிலாங்கூர் சந்தேகமே நாராயண நாராயண.