ஸுஹடி: காலிட் பதவிக்காலத்தை முடிக்க இடமளிப்பதே ஜனநாயகமாகும்

zhudiபாஸ்  அதன்  உறுப்பினர்கள்  மந்திரி  புசார்  விவகாரம்  பற்றிப்   பேசுவதற்குத்  தடை  போட்டிருந்தாலும்  அதன் மத்திய  குழு  உறுப்பினர்  முகம்மட்  ஸுஹடி  மர்சுகி  அதை  மதிப்பதாக  தெரியவில்லை.  அப்துல்  காலிட்  இப்ராகிமை  மந்திரி  புசார்  பதவியிலிருந்து  தூக்கும்  பிகேஆர்  முயற்சிகளை  அவர்  தொடர்ந்து  குறை கூறியுள்ளார்.

ஏற்கனவே  கைபேசி தகவல்  பரிமாற்றம்  ஒன்றில்  பாஸ்  அம்னோவுடன்  இணைந்து  முஸ்லிம்-அல்லாதாரின்  புகார்களை
“அடித்து  நசுக்க”  வேண்டும்  என்று கூறியதற்காக  பலத்த  கண்டனத்துக்கு  ஆளாகியுள்ள  ஸுஹடி  காலிட்டின்  பதவிக்காலம்  முடியும்வரை  அவரை  மாற்றக்  கூடாது எனக்  கூறியிருக்கிறார்.

ஒரு  தலைவர்  “வழக்கத்துக்குமாறான” முறையில்  அகற்றப்பட்டால்  அது  புதுவகை “குழப்பக்  கலாச்சாரத்தை” உருவாக்கி  விடும்  என்று  சமூக  வலைப்பதிவு  ஒன்றில்  ஸுஹடி  கூறினார்.