பாஸ் மத்தியக்குழு உறுப்பினர் முகம்மட் ஸூடி மார்ஸூக்கி கசியவிடப்பட்ட ஒரு உரையாடல் செய்தியில் கூறியிருந்த “இனவாத மற்றும் தீவிரவாத” கருத்துகளுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று டிஎபி இன்று கடுமையான கோரிக்கையை விடுத்துள்ளது.
எதிரணி கூட்டணியில் இருக்க வேண்டுமா அல்லது விலகிக் கொள்ள வேண்டுமா என்ற ஆய்வை மேற்கொள்வது அந்த இஸ்லாமியக் கட்சியின் தனியுரிமை. ஆனால், ஸூடி மேற்கொண்ட பகுப்பின் இரண்டாவது பாகம்தான் பல மலேசியர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது என்று டிஎபியின் தேசிய பரப்புரை செயலாளர் டோனி புவா கூறுகிறார்.
ஸூடி பக்கத்தானில் இருக்க வேண்டுமா அல்லது இல்லையா என்பது கேள்வி அல்ல. பாஸ் கட்சியின் உறுப்பினர் என்ற முறையில் அது அவரது உரிமை”, என்று புவா ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
பாஸ் அம்னோவுடன் கூட்டு சேர்வது பற்றி டிஎபியும் முஸ்லிம்-அல்லாதவர்களும் புகார்கள் செய்தால் அவர்கள் “நையப்புடைக்கப்படுவர்” என்று ஸூடி கூறியிருந்ததை புவா குறிப்பிட்டார்.
தாம் இதர மக்களின் கருத்துகளைப் பிரதிநிதித்தேன் என்ற ஒரு சாதாரண விளக்கத்தைத் தவிர ஸூடி வேறு எதுவும் அவரது செய்தியின் இரண்டாவது பகுதியைப் பற்றி கூறவில்லை.
“அவரது பகுப்பு அவருக்கு இனவாத மற்றும் தீவிரவாத சிந்தனைகள் இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. அதில் மலாய்க்காரர்-அல்லாத, முஸ்லிம்-அல்லாத மலேசியர்களின் உரிமைகளை மிதித்து நசுக்கலாம்”, என்றார் புவா.
இதை பாஸ் தலைவர்களே முடுவு செய்யட்டும்.பாஸ்ஸில் இரண்டு பிரிவுவில் இவா எந்த பிரிவை சார்ந்தவா தெரியாது.அரசியல்ல இதெல்லாம் சகஜம் பூ,பாஸ் பி.ஆரை விட்டு விலகினா பின் பாஸ் சிலாங்கூறை ஆலும் போல் தெரிகிறது,நாராயண நாராயண.