சிலாங்கூர் பாஸ், பக்காத்தான் ரக்யாட்டிலிருந்து விலகி அம்னோவுடன் இணைந்து சிறுபான்மை மாநில அரசை அமைக்கத் திட்டமிடுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது.
வாட்ஸ்எப்-இல் பாஸ் மத்திய குழு உறுப்பினர் முகம்மட் ஸுஹடி கூறியிருப்பதுபோல் எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட சிலாங்கூர் பாஸ் செயலாளர் முகம்மட் கைருடின் ஒத்மான், அந்த இஸ்லாமியக் கட்சி பக்காத்தானில்தான் இருக்கும் என்றார்.
“அவர் கூறியிருப்பதுபோல் எதுவும் விவாதிக்கப்படவில்லை.
“பாஸ் பக்காத்தான் ரக்யாட்டுக்குக் கடமைப்பட்டுள்ளது. அதற்குத்தான் அது விசுவாசமாக இருக்கும்”, என்று முகம்மட் கைருடின் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது.
சமயத்தை முன் நிறுத்தி அரசியல் நடத்தும் நீங்கள் உள்ளொன்று வைத்து புறொமொன்று பேசித்திரியக் கூடவே கூடாது. அது தங்கள் சமயத்திற்கு இழிவு; PR-ன் அழிவு. ஆமாம், அப்படியானால் இந்த சுஹாடி மீது என்ன நடவடிக்கை..?! ஒண்ணுமில்லை என்றால் அவர் சொன்னதை நீங்கள் ஆமோதிக்கிறீர்கள் என்றுதானே பொருள். அப்படியென்றால் நீங்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது……… இறைவன் விரும்பார்….
கடந்த பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி அதிக இடங்களை வென்றதின் காரணம் முஸ்லிம் அல்லாதவர்களின் வாக்குகளே. இதை மனதில் நிறுத்தி எதையும் சிந்தித்து பேச வேண்டும். தூக்கி விட்டவர்களுக்கு தூக்கி எறியவும் தெரியும். பக்காத்தானில், மத வெறியர்களுக்கோ இனவாதிகளுக்கோ சற்றளவும் இடமளிக்கக் கூடாது. இலையேல் பக்காத்தான் உடைவது திண்ணம்….