திடீர் தேர்தல் நடந்தால் அதிக இழப்பு பாஸுக்குத்தான்: எச்சரிக்கிறது டிஏபி

tonyசிலாங்கூரில்  மந்திரி  புசார்  நெருக்கடியின்  விளைவாக  ஒரு  திடீர்  தேர்தல்  நடக்குமானால்  மாநில  ஆட்சி  பிஎன்  கைக்கு  மாறும்  அபாயம்  இருப்பதாக  டிஏபி  எச்சரித்துள்ளது. அதில்  பாஸ் கட்சிக்குத்தான்  இழப்பு  அதிகமாக  இருக்கும்  என்றும்  அது  கூறிற்று.

பக்காத்தான்  முடிவெடுக்க  முடியாமல் இருப்பதைக்  கண்டு  சிலாங்கூர்  மக்கள்  எரிச்சலும்  ஆத்திரமும்  அடைந்திருப்பதாக  ஆய்வுகளிலிருந்தும்  பின்னூட்டங்களிலிருந்தும்  தெரிய  வருவதாக  சிலாங்கூர்  டிஏபி  தலைவர்  டோனி  புவா  கூறினார்.

“தற்போதைய  நிலை  தொடருமானால்,  பக்காத்தான்  ரக்யாட்  உறுப்புக்  கட்சிகள்  எல்லாமே  இழப்பை  எதிர்நோக்கும்.

“ஆனால், மற்ற  கட்சிகளைவிட  பாஸ்தான்  அதிகம்  பாதிக்கப்படும்”, என  டோனி  புவா  ஓர் அறிக்கையில்  கூறினார்.