‘பாஸ் அனைவருக்குமானது’ என்றுரைத்து முஸ்லிம்- அல்லாதாரர் அக்கட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததற்காக டிஏபி மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங் லியாங்.
“வாட்ஸ்அப்-இல் பாஸ் மத்திய குழு உறுப்பினர்களிடையே நடந்த உரையாடல் அம்பலமானதை அடுத்து பாஸ் அனைவருக்கும் நல்லது செய்யும் கட்சி அல்ல என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
“முஸ்லிம்- அல்லாதாரைப் பலியிட்டு மலாய் முஸ்லிம் மேலாதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கத்தைக் கொண்டது கட்சி அது.
“கடந்த இரண்டு தேர்தல்களிலும் ‘பாஸ் அனைவருக்குமானது’ என்று உயர்த்திப் பேசி வந்ததற்காக டிஏபி மன்னிப்பு கேட்க வேண்டும்”, என்றவர் கூறினார்.
பாஸின் கொள்கைகளை டி எ பி பொய்யாக்கி விட்டது.
இதற்கு அஸ்திவாரம் அன்வரே,நாராயண நாராயண.
நேற்று, பாஸ் கட்சிக்கு பரிந்து பேசியது, டி.எ.பி. இன்று பி.கே.ஆர். பக்கம் சாய்ந்துவிட்டது. நாளை…………..