சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா(எஸ்ஏஎம்எம்) சிங்கப்பூருக்குச் செல்லும் வழியான ஜோகூர் பாரு சுங்கத்துறை, குடிநுழைவுத்துறை, குவரண்டின் (CIQ) வளாகத்தில் சாலைக் கட்டணத்தை அளவுமீறி உயர்த்தும் முடிவைக் கண்டித்துக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
“பொதுப் போக்குவரத்து நிறுவனங்களும், ஊழியர்களும் பாதிக்கப்படும் மற்றவர்களும் அம்முடிவுக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என ஜோகூர் எஸ்ஏஎம்எம் கேட்டுக்கொள்கிறது…….சாலை குத்தகையாளர்களுக்கும் அரசாங்கத்துக்கும் நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்”, என அந்த என்ஜிஓ-வின் ஜோகூர் ஒருங்கிணைப்பாளர் முகம்மட் அஸ்ரோல் அப் ரஹானி கூறினார்.
நேற்று, தொழிற்சாலை பேருந்து ஓட்டுனர்கள் சாலைக் கட்டணத்தைச் செலுத்த மறுத்ததை அடுத்து CIQ-இல் காலை 5 மணி தொடங்கி மூன்று மணி நேரத்துக்கு போக்குவரத்து நிலைகுத்தியது.
சிங்கப்பூர் உயர்த்தியபோது யாரும் ஒன்றும் சொல்ல வில்லை அனால் மலேசியா உயர்த்தியவுடன் கத்துகின்றனர் ஏன் ?
மலேசியா என்ன இளிச்ச வாயனா
உண்மை அது தான் . ஜோஹோர் பாருவில் ஷூபிங் செய்யும் சிங்கபுரர் அதிகம் . சமன் கட்டுவதும் இல்லை . மலேசியா போலீசும் அதை கண்டு கொள்வதும் இல்லை . மலேசியா வாகனம் சிங்கையில் இருந்து வரும்போது எல்லா வித கட்டணங்களும் செலுத்திய பின்னே வெளியாக முடியும் . இங்கே நிலைமை வேறு . ட்ராபிக் போலீசில் விசாரித்தாலே தெரியும் . இப்போது யோசிகின்றேன் மகாதிர் இன்று வரை ஆட்சில் இருந்திருக்க குடாத என்று ..
சிங்கபூரை குறை சொல்பவன் ஒரு கேன காதான்னாகதான் ,அதாவது கேனையன் ,,சத்யராஜ் கேனையன் கேனையன்