இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, இந்திய சமூகத்துக்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கொடுத்ததாகச் சொல்லப்படும் ரிம540 மில்லியன் எப்படிச் செலவிடப்பட்டது என்பதை மஇகா தலைவர் ஜி.பழனிவேல் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தத் தொகை பற்றி நஜிப்பே இவ்வாண்டு தொடக்கத்தில் பிரதமர்துறை துணை அமைச்சர் பதவியிலிருந்து வேதமூர்த்தி வெளியேறியதை அடுத்து கூறியிருந்தார்.
“இந்திய சமூகத்துக்காக இந்தத் தொகை கொடுக்கப்பட்டதை மஇகா தலைவர் ஒப்புக்கொள்கிறாரா அல்லது மறுக்கிறாரா என்பதை இண்ட்ராப் அறிய விரும்புகிறது. அப்படி அது கொடுக்கப்பட்டிருந்தால் இந்திய சமூகத்திடம் அது எப்படிப் பிரித்தளிக்கப்பட்டது என்பதற்கு அவர்கள்தாம் கணக்கு காட்ட வேண்டும்”, என முகநூலில் வேதமூர்த்தி குறிப்பிட்டிருந்தார்.
“அது உண்மை அல்லவென்றால் பழனிவேல் தாமே முன்வந்து பிரதமர் சொன்னது உண்மையல்ல என்பதை உரைத்திட வேண்டும்”.
நாட்டில் இந்தியர்கள் படும் துயரங்களைக் கண்டுக்கொள்ளாமலேயே இருந்தால் அச்சமூகம் “திரும்பி வர முடியாத நிலைக்குச் சென்றுவிடும்”, எனவும் வேதமூர்த்தி எச்சரித்தார்.
ரிம540 மில்லியன் எப்படிச் செலவிடப்பட்டது ,,எப்படி ,,,,, இந்திய சமூகத்துக்காக இந்த பணம் கொடுக்க பட்டது ? இல்லவே இல்லை ,அப்படி இந்தியா சமுகத்துக்கு கொடுக்க பட்டு இருந்தால் இந்நேரம் அந்த பணம் தமிழ் மக்களை போயி சேர்ந்து இருந்திருக்கும்? 540 MILLIAN .கொடுக்கப்பட்டதோ ம இ காவுக்கு அப்புறம் எப்படி போயி மக்களுக்கு கிடைக்கும் ?
எம் ஐ சி தலைவன் சரியான கணக்கு/ பதில் சொன்னால், அடுத்த தேர்தலில் எம் ஐ சிக்கு சீட்டு இல்லை.
அய்யா ! ம.இ.கா.வினர்க்கு கொடுக்கப்பட்ட மில்லியன் கணக்கான பணத்தைப் பற்றிக் கேட்கிறீர்களே ! இது உங்களுக்கே நியாயமா? “இந்தப் பணம் எங்களுக்கு கொடுக்கப்பட்டது. மக்களுக்கு அல்ல.” என்று அவர்கள் பொறுப்பான ஒரு பதிலை சொன்னால் எங்கே பொய் முட்டிக்கிவீக? அந்தப் பணமெல்லாம் “மைக்கா ஹோல்டிங்க்ஸ்ல” போட்ட மாதிரி. எதிர் பார்க்க முடியாதுலே.இப்போது ஒரு விஷயத்தை மக்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.அதாவது,சலுகை என்றால் ம.இ.காவை நாடுவதும் உரிமை பிரச்னை என்றால் ஹிண்ட்ராப்பை நாடுவதும்தான்.இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் மலேசியா தமிழன் “பழனி வேல்” முருகனுக்கு அரோகரா போடவேண்டியதுதான். அரோகரா! அரோகரா!!!!!!
சரியாக நிறுத்துவிட்டீர்,மோகன் விரிவான அறிக்கை வெளியிடுவீர் என்று எதிர்பார்கின்றோம் ம.இ.க, சொல்லமாட்டார் தெரிந்ததே,மூன்றில் ஒரு பங்கை பங்கு போட்டுட்டு மீதியை கருவூலத்திற்கு கொடுத்திருப்பர்.நாராயண நாராயண.
இந்த அற்புத கேள்வியை ஏன் துணை அமைச்சராக , அரசாங்கத்தில் இருந்தபோது கேட்கவில்லை ? அப்போதே போட்டு உடைத்திருந்தால் ??
அறம்,பொருள்,இன்பம்,உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும் அதாவது,அறவழியில் உறுதியானவனாகவும்,பொருள் வகையில் நாணயமானவனாகவும்,இன்பம் தேடிமயங்காதவனாகவும்,தன்னுயிர்க்கு அஞ்ஜாதவனாகவும்,இருப்பவனையே ஆய்ந்தரிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டுமாம்.உதாரணத்துக்கு காலீட.
rm 540 மில்லியனை கஜானாவில் இருந்து வெளியானதா . ????? நஜிப் யாரிடம் தந்தார் ?? ஓ MIC வாங்கியதா?? . அப்போ அம்போ சிவா சம்போ
இந்த ம இ க தலைவர்களுக்கு எல்லாம் முருகனின் பெயர் பழனி வேல் சுப்ரமணியம் சரவணன் .அனால் உண்மையை மட்டும் பேச மாட்டார்கள் .
kayee அவர்களே விரிவான அறிக்கை வெளியிட முடியவில்லை ,நான்தொடர்ந்து எளிதிநீன் அந்த பணம் எப்படி செலவு செய்து இருப்பார்கள் என்று ,அதை நம்ப செம்பருத்தி தணிக்கை செய்து விட்டார்கள் ,,,என்ன கொஞ்சம் ஆபாசம் கலந்து இருக்கும் ,
முதலில் நஜிப் எந்த ஆண்டு எவரிடம் இந்த தொகையை கொடுத்தார் என்ற உண்மை தெரியவேண்டும் …. பலனிவேளிடம் கொடுத்தார் என்று நம்பும் படி இருந்தால் பழனிவேல் கண்டிப்பாக பதில் சொல்லியாகவேண்டும் ! கும்பிட்ட தெய்வம் கூரையை பொத்துக்கிட்டு கொடுத்தது என்று சொல்லகூடாது ! மக்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் மா
ஈ கா வுக்கு கொடுக்கபட்டதில்லை !
பந்தை டாளமில் உள்ள இந்திய அரசு சார்ப்பற்ற இயக்கங்களுக்கு அரசாங்கம் கொடுத்த மானியாத்தை ம இ க அரசில் வாதிக்கல் எடுத்து தன் உறவினர்கள் தலைவராக இருக்கும் இயகதிறக்கு கொடுத்து விட்டனர் ஆகவே அரசியல் வாதிகள் எந்த இயக்கத்தையும் திறக்க கூடது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்
ஐயா வேதமூர்த்தி தேவை இல்லாம கதை எல்லாம் எல்லாம் சொல்லி எங்கல திசை திருப்பதிங்க உங்க வசதிக்கு மக்களை பலி கட அகதிங்க
நீங்கள் 540 மில்லியன் எங்கே என்று கேட்கிறீர்கள். அவர்கள் நீங்கள் சொன்ன மில்லியன்கள் எங்கே என்று உங்களைக் கேட்கிறார்கள்! இன்று நாகரிகப் போர்வையில் கொள்ளையடித்தவன் தான் மிகவும் தைரியமாகப் பேசுகிறான்! அந்தளவுக்கு தமிழனைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்!
வழக்கறிஞர்: கர்பால் வாகனமோட்டியின் பிரச்சினையை அரசியல் ஆக்காதீர்கள்
http://www.malaysiakini.com/news/270482
பழம்பெரும் தலைவர் கர்பால் சிங் சம்பந்தப்பட்ட உயிருக்கு ஆபத்தான விபத்தில் வானமோட்டிக்கு ஆதரவு அளிக்கும் சில அரசியல் கட்சிகளை வழக்கறிஞர் மாலிக் இம்தியாஸ் சார்வார் சாடினார்.
வானமோட்டி சி செல்வம் ஆபத்தான வகையில் கார் ஓட்டியுள்ளார் என்ற காரணத்தால் விசாரணையை எதிர் நோக்கி தற்போது கம்பாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
“நான் அவர்கள் இந்த விஷயத்தை அரசியலாக்குவது நியாயமற்றது என்று,” அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
பலர் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும். ஏன் அந்த மக்களுக்கு உதவ வழங்க வில்லை?” மாலிக் கேட்டார்.
நேற்று, கெரக்கான், மஇகா மற்றும் அன்பு மலேசியா கட்சியினர், கம்பார் பேராக்கில் அடைக்கப்பட்ட, செல்வத்திற்கு இலவச சட்ட சேவையுடன் மற்றும் RM 5,000 ஜாமீன் பணத்தையும் செலுத்தியுள்ளனர்.
கெரக்கான் கட்சியின் சட்ட மற்றும் தேசிய மனித உரிமை பிரிவின் தலைவர் பல்ஜிட் சிங் தமது அரசியல் வேறுபாடுகளை மறந்து, கர்பால் அவர்களுக்கு மரியாதை நிமித்தமே செல்வத்திற்கு உதவினோம் என்று கூறினார்.
பிசிஎம் துணை தலைவர் டத்தோ ஹுவான் செங் குவானும் கர்பாலுக்கு பல ஆண்டுகளாக பணியாற்றிய செல்வத்திற்கு உதவும் என்று கூறினார்.
ஏப்ரல் 17 ம் தேதி, செல்வம் ஓட்டிய வாகனம் வடக்கு தெற்கு நெடுச்சாலையில் குவா தெம்புரோங் அருகில் அதிவேகமாக ஒரு சுமையுந்துவுடன் மோதியதில் கர்பால், மற்றும் அவரின் தனிப்பட்ட உதவியாளர் மைக்கேல் கொர்னேலியஸ் மரண அடைந்தனர்.
கர்பால் அவர்களின் மூன்றாவது பிள்ளையும், அவரது
புக்கிட் குளூகோர் நாடாளுமன்ற வாரிசான ராம் கர்பால் சிங் மற்றும் இந்தோனேசிய வேலைக்கார பெண், செல்பினா ரெங்காவுக்கும் காயங்கள் மட்டும் ஏற்பட்டன.
அன்பார்ந்த பேரு மக்களே வணக்கம்,இந்த ஆண்டு முதல் இந்நாள்வரைக்கும் பத்திரிகை வாயிலாக நான் படித்தது இந்திய சமுதாயத்திற்கு அரசாங்கம் பல மில்லியன் வெள்ளியும்,பல ஏகர் நிலமும் கொடுத்ததாக என்ன ஆனது தெரியல, இதற்கு போலிஸ் புகார் கொடுகபட்டிருகுது இதுக்கும் இன்னும் விடை கிடைக்கள இதற்கு என்ன அர்த்தம் மக்களே …….மா இ கா தலைவர்களே உங்களுக்கு பதில் தெரியுமா?தெரிந்தால் வாய திரங்கள் மக்கள் உங்கள் உண்மையான பதிலுக்காக காத்திருகிறார்கள் …..வரும் அடுத்த தேர்தல் ….
பிரதமர் நஜிப் கொடுத்த 540 மில்லியன் ரிங்கிட்டுக்கு கணக்கு கேக்கிறார்.என்ன டிராமா நடத்துறார் நஜிப், ஒவ்வொரு புதன் கிழமையும் அமைச்சரவை கூடுகிறது.சாமியார் வேடதாரி பழனிவேலு கூட்டத்திக்கு வருகிறார், அவரிடமே அதிகார பூர்வமாக அமைச்சரவை கூட்டத்திலே எல்லா அமைச்சர்கள் முநிலையில் கேள்வியும் கேட்கலாம், அதக்கு உமைதுரை பழனிவேலு பதிலும் சொல்லாம்.அப்படி சொல்லவில்லை என்றல் லஞ்ச ஒழிப்பு நிறுவனத்திடம் பிரதர் புகார் செய்யலாம்.
அமைச்சரை கூடத்திலும் இந்தியர்களுக்கு நியாயம் கிடைக்காது.லஞ்ச ஒழிப்பு நிறுவனத்திடமும் இந்தியர்களுக்கு நியாயம் கிடைக்காது.உமைதுரை பழனிவேலு கணக்கு கொடுக்க மாட்டன்.இந்த ம இ கா வும், தேசிய முன்னணியும் இந்தியர்களை முட்டாளாக்கி ஒட்டு வங்கி கொண்டு கடந்த 57 ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்றனர்.
டெலிகொம் பங்கு ஊழல் விவகாரத்தில் இந்த டிராமாவை துன் டாக்டர் மகாதிரும் சாமிவேலுவும் அற்புதமாக நாடகத்தை அரங்கேற்றினார்கள்.” நான் வாயை திறந்தால் அம்னோ மகாராஜா தலை உருளும் ” என்று அன்றே சாமிவேலு எச்சரிக்கை விடுத்தார்.அம்னோ மகாராஜா என்று யாரை சாமிவேலு மிரட்டினர் என்பதை அரசியல் சனக்கியர்களால் உணரமுடியும்.இந்த பழைய நாடகம் மிண்டும் பாத்திரங்கள் மாறி நஜிபும் பழனிவேலுவும் நடத்துகிறார்கள்.
ம இ கா வையும் தேசிய முன்னணியையும் நம்பி மோசம் போனது போதும்.இந்த இருவரையும் வில்ல்தினால் புதிய மாற்றத்தை நாம் எதிர் பார்க்கா முடியும்.இவர்களை மாற்றுவோம்.நாம் மாறுவோம்.முன்னேறுவோம் வாரீர்.
மக்கள் பணத்தை திருடிய குடும்பம் நாசமாக போய் விடும் உதரணத்துக்கு மைக்க ஹோல்டிங் பணத்தில் விளையாடிவர்கள் இன்று கணவனும் மனைவியும் தனியாக வாழ்த்து கொண்டு இருக்கிறார்கள் ,
பல நாள் திருடன் ஒரு நாள் அகபடுவான்.
பியாசாதானே மோகன் விடுங்க,அரசியலை எந்த பக்கமும் சாயாது எது எப்படி இருக்கவேண்டும் தெரிந்து எழுதுபவர்,அரசியல் விவகாரமா மோகன்,தேனீ,பொன் ரங்கன் போன்றோர்கள் கருத்து சிறந்ததாக ஏற்கும் வகையில் அமையும்,வாழ்த்துக்கள்,வாழ்க நாராயண நாமம்.
வேதா ,பேசாமல் நீங்கள் முருங்க மரத்தில் ஏறி வேதாளம் சொல்லும் கதை என்ற தலைப்பை எழுதி மரத்தின் மீது மாட்டிகிட்டு ,வரவன் போறவன் கிட்டே கதை சொன்னால் ,கேக்கிறவன் நாலு காசை போட்டு போவான் ,அதை விட்டு புட்டு பணம் எங்கே ,பணம் எங்கே போனது ,பணத்தை நான் எங்கே தேடுவேன் என்று கேள்வி கேட்டால் எவனும் வாயை திறக்க மாட்டான் ,கேள்வி கேட்டா மட்டும் பணத்தை கொண்டாந்து பொதுவில் வைபானுங்க்கள நம் ம இ கா காரணங்க ? MH 370 மே மாயமா போச்சி ! RM 540 மில்லியன் ஒரு காச ,,போயி வேலைய பாருங்கையா ,,,,தமிழன் தலை எழுத்து கோமணம் தான் கட்டுநோம்னு இருந்தால் அதை ஆண்டவனாலும் தடுக்க முடியாது மாபிள்ள ,,,50 வருசமா ம இ க காரன் அடிச்ச கோலாட்டம் இப்ப ளோட லொடன்னு இருக்கு ,வலி கூட தெரியமாட்டிகித்து ,என்ன கண்ணு கொஞ்சம் லேசா இருட்டுது ,,,
ம இக் கா தகவல் பிர்வுதலைவர் முந்திக்கொண்டு அலாறுவதேன் ? இந்திய சமுதாயதின் மேம்பாட்டிற்க்காக அரசாங்கம் வழங்கிய 54கோடிவெள்ளி என்னாவானதுதென்று வேதா மட்டும் கேட்க்கவில்லை? ஒட்டு மொத்த சமுதாயமும் அறிய விரும்புகிறது ? மக்களுக்கு தெளிவு படுதவேண்டியவர்கள் பகிரங்கமாக அறிவிப்பதுதனே முறை ? மா 2இ க ‘ஹோல்டிங்க்ஸ்லிருந்தஇன்று வரை இந்திய சமுதயத்தை சுரண்டும் குள்ளநரிகளுக்கு பஞ்சமே – இல்லை ? எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே ?
கேள்வி எழுந்தால் சம்பபந்தப்பட்டவர்கள் பதில் சொல்வதுதானே நியதி.