எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்மீது மலேசியாவில் வழக்கு நடத்துவது சாத்தியமற்றது என்கிறார் முன்னாள் சட்டவிவகார அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ்.
“(எம்எச் 17-ஐ சுட்டு வீழ்த்திய) கிளர்ச்சிக்காரர்களை விசாரணைக்கு இங்கு (மலேசியாவுக்கு) கொண்டுவர முடியாது என்கிறபோது அது போலி வழக்காகத்தான் இருக்கும்”, என அந்தச் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் மீதான வழக்கை மலேசியாவில் நடத்துவதற்கான வாய்ப்புகளைச் சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேல் ஆராய்வார் என பிரதமர்துறை அமைச்சர் நன்சி சுக்ரி கூறியது பற்றி நஸ்ரி இவ்வாறு கருத்துரைத்தார்.
மலேசியா இவ்விவகாரத்தை அதன் தோழமை நாடுகளின் ஆதரவுடன் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வதே நல்லது என்றாரவர்.
உங்களால் முடியாததா! முழுசா ஒரு விமானத்தையே காணோம் என்று கதை கட்டியவர்கள் ஆயிற்றே! இது முடியாதா!
இங்க ஆடார மாரி அங்க வாலாட்ட முடியாது மொத்ததுல தருவுசு இல்ல
மாவீரர்கள் சஹிட் ஹிஷாமுடின் igb போன்ற அம்னோ வாயடிங்கள அலச்சிக்கிட்டு போ கிளிசிடுவானுங்க