சமையல்காரர் விவகாரத்தில் குவான் எங்கை ஆதரிக்கிறது பெர்காசா

cooksஉள்ளூர்  உணவு  வகைகளை  விற்பனை  செய்யும்  அங்காடிக் கடைகளில்  அந்நிய  சமையல்காரர்களை  வேலைக்கு  வைத்துக்கொள்ளக்  கூடாது  என்று  கூறும்  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான் எங்குக்கு  எதிர்பாராத   இடத்திலிருந்து  ஆதரவு  கிடைத்துள்ளது. மலாய்க்காரர்  உரிமைக்காக  போராடும்  பெர்காசாதான்  லிம்மின்  பேச்சுக்கு  வரவேற்பு  அளித்துள்ளது.

லிம்மின்  பரிந்துரைக்கு  ஏற்கனவே  மசீச  கண்டனம் தெரிவித்ததும்  அதைச் சுற்றுலா, பண்பாட்டு  அமைச்சர்  கண்டித்ததும்  தெரிந்ததே.

“பினாங்கு உணவு  வகைகளைத்  தயாரிக்க  வெளிநாட்டவர்  தேவையில்லை  என்ற  கொள்கையை  பெர்காசா  ஆதரிக்கிறது.

“இவ்விசயத்தில்  முதலைமைச்சரையும்  நஸ்ரியையும்  ஆதரிக்கிறேன்”, என  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்   அலி  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“அதற்காக  நாங்கள்  டிஏபி-யை  ஆதரிப்பதாக  அர்த்தம்  அல்ல. நல்ல  கொள்கைகள்  என்றால்  ஆதரிப்போம், அவ்வளவுதான்”, என்றாரவர்.