சிலாங்கூரில் தேர்தல் நடத்துவது அவசியம் என்கிறார் சட்ட நிபுணர்

azizசுல்தான்  ஷாராபுடின்  இட்ரிஸ்,  சிலாங்கூருக்குப்  புதிய  மந்திரி  புசாரை  நியமனம்  செய்வது  சரியான  முடிவாக  இருக்காது  என்று  அரசமைப்பு  வல்லுனர்  பேராசிரியர்  அப்துல்  அசீஸ் பாரி  கூறினார்.

சுல்தான்  அப்படிச்  செய்தால், காலிட்  இப்ராகிம் சர்ச்சையில்  அவர் குறிப்பிட்ட  ஒரு  தரப்புக்குச்  “சாதகமாக  நடந்துகொள்வதாக”க்  குற்றம்  சாட்டப்படலாம். எனவே, இப்பிரச்னைக்கு  மாநிலத்  தேர்தல்தான்  சிறந்த தீர்வாக  அமையும்  என்று  அச்சட்ட  வல்லுனர்  தெரிவித்தார்.

“தேர்தல்வழி  மக்கள்  தீர்மானிக்கட்டும்”, என்றாரவர்.