சிலாங்கூரில் புதிய தேர்தல் பக்கத்தானுக்கு சாவுமணியாகும்

politicalசிலாங்கூர்  மாநிலத்தில்  புதிதாக  தேர்தல்  நடத்துவது  பக்கத்தான்  அழிவுக்குத்தான்  வழிகோலும்  என்று  எச்சரிக்கிறார்  அரசியல்  ஆய்வாளர்  வொங்  சின்  ஹுவாட்.

அப்படி  ஒரு  தேர்தல்  நடத்தப்பட்டால், மக்கள்  பிஎன்னுக்கு  வாக்களிப்பார்கள்  என்பதைவிட  பெரும்பாலோர்  வாக்களிக்கவே  வர  மாட்டார்கள்  என்பதே  சரியாக  இருக்கும்.

“மேலும்,  மூன்றாம்  தரப்பு ஒன்றும்  மூக்கை  நீட்டி வாக்குகளைச்  சிதறடிக்கும். முடிவு-  பிஎன்  மீண்டும்  ஆட்சிக்கு  வரும்”, என  வொங்  கூறினார்.

நேற்ரிரவு  ஒரு  கருத்தரங்கில்  இவ்வாறு  கூறிய  வொங்,  1977  கிளந்தான்  நெருக்கடியைச்  சுட்டிக்காட்டினார்.

கிளந்தான்  மந்திரி  புசார்  முகம்மட்  நசிர், கட்சியின் உத்தரவுக்குப்  பணிந்து  பதவியிலிருந்து  விலக  மறுத்தார். அந்நெருக்கடிக்குத்  தீர்வுகாண  ஒரு  தேர்தல்  நடத்தப்பட்டது. அதில்  அம்னோ  வெற்றி பெற்றது.

“பாஸுக்கு  இரண்டு இடங்களே  கிடைத்தன”, என்றாரவர்.