பினாங்கில் நிர்வாண விளையாட்டு விழா?

nudist‘பினாங்கு  தெலோக் பகாங்கில்  நிர்வாண  விளையாட்டு  விழா 2014’  எனத்  தலைப்பிடப்பட்ட  காணொளி ஒன்று  இணையத்தில்  வலம்  வந்து  கொண்டிருக்கிறது.  அதை  வைத்து  அம்னோ-ஆதரவு  வலைப்பதிவுகள்  பினாங்கு  அரசு  பாலியல்  முறைகேடுகளுக்கு இடமளிப்பதாகக்  குறைகூறி  வருகின்றன.

ஒரு வலைப்பதிவு  முதலைமைச்சர்  லிம்  குவான் எங்,  சுற்றுலா, பண்பாட்டு  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீசின்  ஆசியுடன்  இப்படிப்பட்ட  நிகழ்வுகளை  ஊக்குவித்து  வருவதாகக்   குற்றம்  சுமத்தியுள்ளது.

அக்காணொளியில்  அம்மண  உடலில் ஓவியம்  தீட்டல் ,  ‘கங்னாம்  ஸ்டைல்’  குதிரை  நடனம், நண்டுநடை  போடுதல், campfire-இல்  கொட்டமடித்தல்  முதலியவை  இடம்பெற்றுள்ளன.

ஆனால்,  தெலோக் பாகாங்  சட்டமன்ற  உறுப்பினர்  ஷா  ஹியாடான்  ஆயுப்  ஹுசேன்,  டிஏபியே  இந்த  அம்மணக்  களியாட்டங்களுக்குப்  பின்னணியில்  இருப்பதாகக் கூறத்  தயாராக  இல்லை.

“அப்படியொரு  நிகழ்வு  நடந்தது  உண்மையா  என்பதை  உறுதிப்படுத்திக்கொள்ள  வேண்டும். இதை  அரசியலாக்க  வேண்டாம். மலேசியாவில்  எந்தவொரு அரசியல்  கட்சியும்  இப்படிப்பட்ட  நிகழ்வை  ஏற்பாடு  செய்யாது”, என்று  அவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.