மலேசிய அரசாங்கம் முன்னாள் தூதரக இராணுவ அதிகாரி ரிஸல்மானை நீதிமன்ற விசாரணைக்காக நியு சிலாந்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறது.
“இதன் தொடர்பில் மலேசியாவும் இந்தோனேசியாவும் தேவையான சட்ட நடைமுறைகள் குறித்து விவாதித்து வருகின்றன”, என வெளியுறவு அமைச்சின் அறிக்கை ஒன்று கூறிற்று.
இவ்விவகாரத்தில் ஒரு மாத காலமாக நிலவிய மவுனத்தை இந்த அறிக்கை கலைத்துள்ளது. இதற்குமுன் அமைச்சு ஜுலை முதல் நாள் வெளியிட்டிருந்த அறிக்கையில் அமைச்சர் அனிபா அமான் ரிஸல்மான் நியு சிலாந்திலிருந்து எப்படி மலேசியாவுக்கு அனுப்பப்பட்டார் என்பதை விளக்கியதுடன் அவ்விவகாரத்தில் எதுவும் மூடி மறைக்கப்படாது எனவும் கூறி இருந்தார்.
அது ஏன் மலேசியாவும் இந்தோனேசியாவும் தேவையான சட்ட முறைகள் குறித்து விவாதித்து வருகின்றன?
நியுசிலாந்து, இந்தோனேசியா எனத் தவறுதலாக உள்ளது எனக் கருதுகிறேன்.
இவனுங்களுக்கு இதே பொலப்பு தான்,தாமதமாக்குவதற்கு காரணம்,ஊபாட் செய்றானோ,செய்யட்டும்.குறள்”மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்”,ஒழுக்கம் உடைமையில் சொல்லப்பட்டவை.வாழ்க நாராயண நாமம்.
உண்மை என்றல் ஒத்துகொள்வது தானே ? ஏன் தேவை இல்லாத கோர்ட் செலவு .
நல்ல முடிவு தீர்ப்பு யார் பக்கம் .
மொழி இனத்தின் அடையாளம் ,திருறளை இப்படியா கேவலபடுத்துவது ரோஜா,அப்படி ரொம்ப அவசியம்னா குடும்பத்தோடு பினேங் போவதுதானே,நாராயண நாராயண.
நீதியை சந்திக்க பயமா?! வேண்டியவர், வேண்டாதவர் என்று பாராமல் குற்றம் சாட்டப்பட்டவரை நீதி தேவதையின் முன் நிறுத்துவது ஒரு நேர்மையான அரசின் முதற் கடமை. இது இவர்களின் முதற் கடமை போல் உள்ளதா? பார்க்க ஒரு பெரும் மாபியாக் கூட்ட சதிபோல் அல்லவா உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு அரசே பரிவுகாட்டினால்….?!