பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, மந்திரி புசார் நெருக்கடியின் காரணமாக திடீர் தேர்தல் நடத்தப்பட்டால் பக்கத்தான் ரக்யாட் சிலாங்கூரை இழக்கும் அபாயம் இருப்பதை ஒப்புக்கொள்கிறார்.
என்றாலும், “அரசாங்கத்தை இழப்பதைவிட கொள்கைகளைக் கட்டிக்காப்பதே முக்கியம்” என்றவர் நம்புகிறார்.
“மாநில அரசை இழக்க நேரும் என்றால் அப்படியே ஆகட்டும். ஆனால், மக்கள் எங்கள்மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது”. நேற்றிரவு கோலாலும்பூர், சிலாங்கூர் சீன அசெம்ப்ளி மண்டபத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்குக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது ரபிஸி இவ்வாறு கூறினார்.
YB ரபிஜியின் வியூக கூற்று குழப்பத்துக்குள் குழப்பமாக உள்ளது.MB காரணமாக இடைத்தேர்தல் வந்தால் சிலங்கூரை இழக்க வேண்டிவரும் ஆனால் கொள்கையில் பிடிப்பாக உள்ளதாக ….அரசியல் விளையாட்டில் கொள்கையா?
அன்வார் கொமடியில் கொள்கையா? காஜாங் காற்றை கிளப்பியவர் நீங்கள். அன்வார் நிற்க முடியாது என்று தெரிந்தும் கொள்கை குழப்பத்தில் அசிசாவை வைத்தீர். பாகாதான் கொள்கையில் பாஸ் கையை விரித்து என்ன கொள்கை?
பல காரணங்களுக்காக அன்வார் பதவிகளை பிடிக்க முடியாது ஆனால் அவரின் மனைவி எந்த கொள்கை கௌரவத்தில் அந்த முக்கிய இடத்தை நிரப்ப முடியும்?
பாகாதான் சிலங்கூரை தோற்கும் என்பதின் பொருள் உங்கள் கொள்கை கோளாறுதான் காரணம் என்று சொல்ல வருகிறீர்களா? அப்படியானால் MB காலீட் விசியத்தில் மக்கள் ஆதரவு உள்ளது PKR செய்யும் அட்டூழியம் மக்களை வெறுப்பேத்தி உள்ளது என்கிறீர்கள்?
உங்கள் புத்ரா ஜெயா பாதை தவறிய வியூகம். தெலுக் இந்தான் கோளாறு ,காஜாங் அலையில் அன்வார் கேசு ,ஆட்டிப்படைக்கும் அசிசா MB பதவி போராட்டம். இதுதான் வாக்காளர்களின் புழைப்பா ? உகளுக்கு முழு நேர அரசியல் வேடிக்கை வெடிகளில் நங்கள் நெருப்பு சாம்பல்களா?
MB காலீட் நீங்கள் கொடுத்த காரண கடிதத்தை ஊழல் ஆணையிடம் தந்து விசாரிக்க சொல்லிவிட்டார். காரணம் கொள்கை இல்லாத நிர்வாக மூட தனத்துக்கு சவால் விட்டுள்ளார். ஒரு மாநில MB கே காரணம் காட்டும் கடிதம் கொள்கை சிரிப்பா சிரிக்குது சார்?
முடித்த PKR கட்சி தேர்தலில் அப்படி என்ன கொள்கை வடிந்தது? கட்சி தேர்தலில் ஆரபித்த வெடிகள்தாம் தாம் இன்று மாநிலமே ஆட்டங்கண்டு துடிக்கிறது.
ஒருவனின் ஆரசியல் ஆசைக்காக மாநிலத்தையே இழக்க வேண்டிய பரிதாபம் ஒரு மோசமான வியூக விசப்பரீட்சை எங்கு போய் முடியும் என்பதை நாளை மறு நாள் பாகாதான் “சூப்” மீட்டிங்கிர்ககு பிறகு சொல்கிறேன். ஆனால் சிலாங்கூர் மாநில அரசு அரசியல் கண்ணாடியில் பல மின்மினி பூச்சிகள் மோதி மக்குகள் போல விழிப்பது தெரியும்.
தானோ, தனது மனைவியோ முதல்வராக இல்லாத சிலாங்கூர் மாநிலம், PKR கைவசம் இருந்தால் என்ன ,போனால் என்ன, என அன்வார் நினைப்பது போல தோன்றுகிறது. [என்னுடைய கருத்து தவாறாக இருக்கலாம். ஆனாலும், ‘தவறில்லையே!’]?
மீண்டும் சிலங்க்கூரை அடைய பல வருடங்கள் ஆகலாம்,மக்களும் அதிர்ப்தியில் கழன்று கொள்வர்,புதுசா இனி மக்களை ஏமாத்தமுடியாது.நாராயண நாராயண.
தம்பி நீயெல்லாம் நல்லா வருவே…. சும்மா காமடி பண்ணாமே… ஒரு ஓரமா போய் படுத்து உறங்கு.
பக்காத்தானின் ஒருமொத்த முடிவுக்கு ஆதரவு கொடுப்போம். அதுவரை அரசியல் நாடகத்தை ரசிப்போம்.
எம் பியை மாற்றும் விவகாரத்தில் டி ஏ பி ஆதரவு கொடுப்பதின் வியூகத்தைப்பற்றி மக்களின் கருத்து?
பாகத்தான் ராக்யாட் மறு தேர்தல் கண்டிப்பாக ஜெய்க்கும் காரணம் இது ஒரு குழந்தை,நடக்க பழகும் குழந்தை,அப்படிதான் இருக்கும் கிலே விழும் பிறகு எழுந்திருக்கும்.அதற்கு நாம் அப்படியே விடமுடியாது போக போக சரியாகி விடும்.மக்களே யோசியுங்கள் போன ஐந்து வருடம் சரியாக தானே போனது இப்பொழுது என்ன வந்தது?
நாக்காலியை கணக்கு பண்ணுங்க போஸ்,பாஸ்=,பி.கே.ஆர்=,டி.எ.பி=,வும்னோ=,.பி.கே.ஆர்+டி.எ.பி=28,பாஸ்+வும்னோ=28.சோ யாரும் மேஜோரிடி இல்லை,மறு தேர்தல் நடக்கும்,இல்லையேல் சிலாங்கூர் ஸ்தம்பிக்கும்.எல்லா திட்டமும் தலையணை போட்டு குறட்டை விட்டு தூங்க்கும்,அன்வர்கு பைதியம் பிடித்துவிட்டது,இழந்தால் சில மாமாங்கம் ஆகலாம் மீண்டுவர.சுயநலம் கருதாது இருப்பின் புகழ் நிச்சயம்.குடும்பத்துக்கு சொத்துசேர்க மக்கள் சொத்தில் கை வைக்கலாமா.அழுக்காறாமை-ஒழுக்காறாக் கொள்க ஒருவன் தன் நெஞ்சத் தழுக்கா ரிலாத இயல்பு குறள் 161,மற்றும் வெஃகாமை-நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் குறள் 171.வாழ்க நாராயண நாமம்.
kayee சிறு திருத்தம். PKR=14, DAP=15, PAS=15, Barisan=12. ஆக மொத்தம் சிலாங்கூர் சட்டப்பேரவையில் 56 நாற்காலிகள்..PKRம் DAPயும் சேர்ந்தால் 29, PAS ம் பரிசானும் சேர்ந்தால் 27தான்.
சிங்கம்… காலிட்டை நீங்கள் பாக்காத்தானில் சேர்த்துவிட்டீர்கள். அவரை எதிரணியில் சேர்த்துவிடுங்கள். காலிட்டுக்கு ஆப்புவைக்கும் அணிக்கே அவர் எப்படி வாக்களிப்பார்? ஆக 28=28
PKR இல் இருந்து 5 பேரை காலீட் கொண்டு வர முடியும்! ஐயோ அன்வாருக்கு ஆப்பு சார் !!! டின் திங்க தொங்க ….இடைதேர்த்தல் வந்தால் இப்ப இருக்கும் DUN உறுபினர்கள் நாசி லேமக் சாப்பிட போலாம்!!!
தமிழன் சார். உங்கள் கணக்கு சரிதான். சிலாங்கூர் மக்கள் தேர்தல் காலங்களில் போட்ட கணக்கு சரியில்லையோ?
மக்கள் நம்பிக்கையைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பது உண்மை தான். ஆனால் மக்கள் பணத்தை வீணடிப்பது வீணர்களின் வேலை அல்லவா! உங்கள் வேலை அல்லவே!
பழையபடி பாரிசானுக்கே ஓட்டு போட்டு ஆட்சி கட்டிலில் அமர
வைப்போம்.
பொது மக்களில் பொறுப்பற்ற அரசியல் அறிவு கிஞ்சிற்றும் அற்ற ஒரு கூட்டம் இப்பவே இடைத்தேர்தல் அறுவடைக்கு தயாராகி வருகிறது. ராமன் ஆண்டாளும் இராவணர் ஆண்டாளும் எங்களுக்கு கவலை இல்லை. தேர்தல் தேர்த்திருவிழாவில் அறுவடையைப் பார்த்துக்கொண்டு போவோம். பிறகு ஐந்தாண்டுகளுக்கு எவன் எவனுக்கு என்ன தேவையோ அதற்குத் தகுந்தாப்புல எவன் காலையோ கழுவி குடிக்கட்டும். நமக்கென்ன? எனும் மனோபவமிக்க ஒரு கூட்டம் பொதுமக்கள் எனும் பெயரில்!
தினக்குரல் பத்திரிக்கையை படித்து பாருங்கள் ‘சுடும் உண்மைகள் ‘ என்ற பகுதியை சிலாங்கூரில் மந்திரி பெசார் மாற்றம் காலத்தின் கட்டாயம் என்ற தலைப்பில் விளக்கமாக எளிதியுள்ளார் அப்பொழுது , விளங்கும் கால்லிட் இப்ராகிமின் தில்லாலங்கடி திருகு தாளம் !
ஆஹா ஊஹ் என்றால் மீண்டும் பி என் கே ஓட்டுபோடுங்கள் என்று பிதற்றா கூடாது பி என் உல்லாவர்கலெல்லாம் என்ன ———யா சீளார்களோ?
காலீட் பி.கே.ஆரில் ஊழல் செய்த பல அமைச்சரின் பைலை லஞ்ஜ ஒழிப்பிடம் சேர்துவிட்டார்,தெரியாது எப்போது லஞ்ஜ ஒழிப்பு பி.கே.ஆர்,அமைச்சர்களின் கதவை தட்டும் யென்று,இந்த நாடகத்தில் நிரைய நாட்காலிகள் வும்னோவுக்கு தானே நடந்து போய்விடும்.பாஸ் வும்னோ கூட்டனி ஆட்சி அமையும் சிலாங்கூரில்.எதிர் கட்சி டி.ஏ.பி.[நான் அப்பவே சொன்னேன்].தெரிஞ்சிரிச்சா எல்ல்ல்லாம் தெரிஞ்சிரிச்சா,அப்பச் செரி விடு,நாராயண நாராயண.
தமிழன் சார்! ராமன் ஆண்டாலும் பிரச்சினை இல்லை ராவணன் ஆண்டாலும் கவலையில்லை. இப்போ அனுமார் ஆளுவது போல உள்ளது சிலாங்கூர் மாநிலம். பக்காத்தானின் தலைவர்கள் ஆட்சியாலும் தகுதியற்றவர்களாகி வருவது உண்மைதான். அதற்காக பக்காத்தானை தண்டித்து விடக்கூடாது. பக்காத்தானில் உள்ள பெரும்பாலான சோணகிரி தலைவர்களை தூக்கி எறிவதில் முனைப்பு காட்டுவோம். தற்போதைய நமது நாட்டு சூழலில் பக்காத்தானே நமது தேர்வாக இருக்கவேண்டும். சவக்குழி பாரிசானை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மலைப்பாம்பிடம் தப்பித்து முதலை வாய்க்குள் சிக்கி விடாதீர்கள்.