பினாங்கு தெலோக் பாகாங் தேசிய வனப் பாதுகாபுப் பகுதியில் நிர்வாணக் கேளிக்கைகளில் கலந்துகொண்டதற்காக பிடிபட்ட 15பேரில் எழுவர் மலேசியர்கள் என பினாங்கு போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபி கூறினார்.
அந்நிகழ்வு தொடர்பில் போலீசார் 10 வாக்குமூலங்களைப் பதிவு செய்திருப்பதாக ரஹிம் தெரிவித்தார்
“பிடிபட்ட 15 பேரில் எழுவர் மலேசியர்கள், நால்வர் சிங்கப்பூரர்கள், இருவர் மியான்மார் நாட்டவர், ஒருவர் இந்தியர், இன்னொருவர் பிலிப்பினோ”, என ரஹிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
சபாஷ்! போலீஸ் என்றால் போலீஸ்தான். அம்மணமாக C4 குண்டு வைத்து அயல்நாட்டு பெண்ணான அல்தாந்துயாவை தகர்த்திய ‘பெரும் புள்ளிகளை’ கைது செய்து விட்டீரோ என ஆச்சர்யப்பட்டு அதிர்ந்து போனேன். பினாங்கிலே இடம்பெற்ற மேற்சொன்ன சம்பவத்தில் 15 பேரை கைது செய்த போலீசாரின் சாதனையோ சாதனை. இப்பேற்பட்ட சாதனைப் புரிந்த போலீசார், அல்தாந்துயா கொலையாளிகளை கண்டு பிடிப்பது பெரிய விஷயமே அல்ல. மலேசிய போலீஸ்! கின்னஸ் சாதனைகளுக்கு பரிந்துரைத்தால் என்ன?
அந்த மண விழாவை ஏற்பாடு செய்தவர்கள் மலேசியர்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?