ஞாயிற்றுக்கிழமை காலிட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படும்

d dayபாஸ்,  டிஏபி  இரண்டுமே, அப்துல்  காலிட்  இப்ராகிம் சிலாங்கூர்  மந்திரி  புசராக  தொடர்வதை  ஆதரிப்பதா,  வேண்டாமா  என்பதை  முடிவு  செய்ய  உயர்தலைமைத்துவக்  கூட்டங்களை  ஆகஸ்ட் 10-இல்  நடத்துகின்றன.

இவற்றில்  பாஸ் மத்திய  குழு  என்ன  முடிவெடிக்கப்  போகிறது  என்பதுதான்  முக்கியம்.  டிஏபி,  காலிட்டுக்குப்  பதில்  ஒரு பெண்மணி  மந்திரி  புசாராக  நியமிக்கப்படுதை  ஆதரிப்பதாக  ஏற்கனவே  அறிவித்திருக்கிறது. டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்தான் அது  குறிப்பிடுகிறது.

இந்நிலையில், பாஸ் காலிட்டை  ஆதரிப்பது  என  முடிவு  செய்யுமானால் ஏற்கனவே  மட்டுப்படுத்தப்படாதிருக்கும்  நெருக்கடி  மேலும்  சிக்கலாகும்.